வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வெற்றி

“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை. இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரைமணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம்.

ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள். அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண்.

இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது. பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும்.

பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ரமலானில் இறுதி பத்து நாட்கள்...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191.
மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையை தண்டனையும் உணர்ந்திட கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தையும் நபி மொழிகளையும் பார்க்கவும்.

அல்லாஹ் அல் குர்ஆனில்,
நம் வேதவசனங்களை நிராகரிக்கின்றவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். ( அல் குர் ஆன் 4 : 56 ) என்று எச்சரித்துள்ளதையும் மேலும் நரகத்தின் கொடுமையை உணர்த்தும் கீழ்க்கண்ட வசனங்கள் அதன் கொடுமையை அஞ்சி அதை விட்டுத் தப்பிடும் விதமாக வாழவேண்டியதை நினைவூட்டும் ஓர் அறிய அச்சுறுத்தல் கலந்த உபதேசம் ஆகும்.

திண்ணமாக, நரகம் வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றது - வரம்பு மீறியவர்களின் வாழ்விடமாக! அதில் அவர்கள் ஊழியூழிக் காலம் வீழ்ந்து கிடப்பர். அங்கு, குளிராக-குடிப்பாக எதையும் அவர்கள் சுவைக்கப் போவதில்லை - கொதியூட்டப் பட்ட நீரையும் சீழையும் தவிர. அவர்களுக்கு அவை தகுமான கூலிதாம். (ஏனெனில்,) கணக்குத் தீர்க்கும் நாளை அவர்கள் எதிர்பார்க்காமல் (மறுத்து) வாழ்ந்தனர். மட்டுமின்றி, நம் சான்றுமிகு வசனங்களை முற்றும் பொய்யெனக் கொண்டனர். ஒன்று விடாமல் நாம் அனைத்தையும் கணக்காய்ப் பதித்து வைத்தோம். எனவே, (மறுத்து வாழ்ந்தவர்களே!) அனுபவியுங்கள்; நாம் உங்களுக்கு அதிகப் படுத்தவிருப்பதெல்லாம் வேதனையைத் தவிர வேறன்று. (அல் குர் ஆன் 78:21-30)

நபிமொழி
"இறைவனை அஞ்ச வேணடிய அளவுக்கு அஞ்சுங்கள்! முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள் என்ற (3 : 102) வசனத்தை நபி(ஸல்) ஓதினார்கள். பிறகு (நரக வாதிகளுக்குக் கொடுக்கப்படும்) ஸக்கூம் எனும் மரத்திலிருந்து ஒரு துளி இவ்வுலகில் சிந்தப்பட்டால் இவ்வுலக வாசிகளின் வாழ்க்கையையே அது சீரழித்து விடும் என்று கூறிவிட்டு அதுவே உணவாகக் கொடுக்கப்படும் (நரகவாசிகளின் நிலை) எப்படி இருக்கும்!? என்று கூறினார்கள்.அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா

நரகவாசிகளில் இலேசான தண்டனைக்குரியவரது உள்ளங்கால்களில் தீக்கங்குகள் வைக்கப்படும். அதனால் மூளை கொதிக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

நீங்கள் மூட்டும் நெருப்பு நரகத்தின் வெப்பத்தில் எழுபதில் ஒரு பங்காகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
இவற்றை நினைவில் எந்நேரமும் நிறுத்தி அல்லாஹ் எச்சரித்துள்ள நிரந்தர நரகத்திற்குரிய ஷிர்க் இணைவைத்தல், (4 : 48,116) வட்டி வாங்குதல் (2 : 275-278), போன்றவற்றை உடன் கைவிட வேண்டும், மேலும் நரகத்தின்பால் நெருக்கம் ஏற்படுத்தும் இதர எல்லாவிதமான பாவமான சொல், செயல்களில் இருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் பொருள் ஈட்டலிலிருந்தும் தம்மை முழுமையாக தடுத்துக் கொள்ள உறுதி பூண்டு,(17 : 28-31) நிகழ்ந்து விட்டவைக்கு வருந்தி அதில் மீண்டும் செல்லக்கூடிய வழிகளை கைவிட்டு நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும். குர்ஆனில் வசனங்களைப் பார்க்க.

மேலும் அல்லாஹ்வின் உபதேசம் தொடர்கிறது:

முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் இடுகின்ற கட்டளைகளில் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 : 6)

மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொள்ளும் தாங்க இயலாத பயங்கரமான வேதனையாம் நரகத்திலிருந்து நாமும் நம் பொறுப்பில் உள்ள நம் குடும்பத்தினரும் முழு மனித சமுதாயமும் மீட்சியையும் பாதுகாப்பும் பெறக்கூடிய விதத்தில் நாம் என்றென்றும் தியாக மனப்பான்மையுடனும் இஸ்லாமிய இறை வரம்பினுள்ளும் அவற்றின் அடிப்படைக்குச் சிறிதும் மாற்றமில்லாத விதத்திலும் மன உறுதியுடனும் தெளிவுடனும் செயல்பட முனைய வேண்டும்.

உதாரணமாக ஒரு சிலர் இம்மை-மறுமை வாழ்க்கை செம்மைபெற முறையாக முயல்வதும் இறைவனைத் வேண்டி தொழுவதும் தொழுது முடித்த பின்னர் நீண்ட நேரம் இரு கரமேந்தி அல்லாஹ்விடம் பிராத்தித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

இன்னும் சிலர் அவசர அவசரமாக தொழுது முடித்தவுடன், பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அல்லது துவா எனும் இந்த பிராத்தனையே செய்யாமல் வெளியேறி விடுகின்றனர். நபி (ஸல்) அவர்கள், "அத்துவாஉ ஹுவல் இபாதா - துவா என்பதே ஒரு வணக்கமாகும்" என்று கூறியுள்ளார்கள் என்பதை நாம் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நினைவில் வைத்து அல்லாஹ்வைப் புகழ்ந்து, நமது அனைத்துத் தேவைகளையும் கேட்க வேண்டும்.
நமது தேவைகளை நிறைவேற்ற வல்ல ஒருவன் அவனே! நாம் கேட்டும் கேட்காமலும் நமக்கு எல்லாம் வழங்கிய, வழங்கிடும் கருணையாளன் அவனே! கஷ்டங்கள், நோய்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் நீக்க வல்லவன் அவன் ஒருவனே! என்றும், அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்து விட்ட குற்றங்கள், குறைகள், பாவங்கள் என்று எல்லாவற்றையும் மன்னித்தருளக் கூடியவன் அவனே! என்றும் முறையாக உள்ளத்தால் நம்பி, எல்லாம் வல்லவனாகிய அல்லாஹ்விடம் மனமுருகி சமர்பித்து நாமறிந்த மொழியில் நமக்காகவும் நமது குடும்பத்தினருக்காகவும் உலக முஸ்லிம்களுக்காகவும் ஈருலக வெற்றியையும் ஈடேற்றத்தையும் கேட்க வேண்டும். மிகப் பெரும் இழப்பும் வேதனையுமாகிய நரக நெருப்பில் இருந்து பாது காப்பும் தேடவேண்டும்.

எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பேறுகளைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2 :201)
Thanks
சத்தியமார்க்கம்.காம்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ரமலானில் இரண்டாவது பத்து...


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)
இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும் பேரும் புகழும் சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது.

நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.

"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.

இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)
thanks
சத்தியமார்க்கம்

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள்.

பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே தவிர பலமான செய்திகள் அல்ல என்பதற்காகவே மக்களின் பார்வைக்கு தருகிறோம்.
  • - யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எமக்கு அருள்புரிவாயாக! ரமழானை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக என நபியவர்கள் கூறினார்கள். (நூல்: பஸ்ஸார். தபரானி)
    இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் ஸாயித் பின் அபீ ருகாத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் இவர் பலஹீனமானவர் என்று இமாம் நஸயீ (ரஹ்), இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.


  1. - ரமழானின் ஆரம்ப (பத்து நோன்புகளு)ம் ரஹ்மத்தாகவும் அதன் நடுப்பகுதி (பத்து நோன்புகளும்) மஃபிரத்தாகவும் அதன் இறுதி பகுதி (கடைசிப் பத்து) நரக விடுதலையாகவும் உள்ளது நபியவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னு குஸைமா)


  2. இதன் அறிவிப்பாளர் தொடரில் அலி இப்னு ஸைத் இப்னு ஜுத்ஆன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும் இந்த செய்தியை பதிவு செய்த இமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் இது பலவீனமானது என்பதை குறிக்க ‘இது உறுதியானதாக இருந்தால்’ என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார்கள். பலஹீனமான ஹதீஸை அடையாளம் காட்டுவதற்கு இமாம்கள் கையாளும் முறை இது.


  3. ரமழானில் உள்ள சிறப்புகளை அறிந்தால் வருடம் பூராவும் ரமழானாக இருக்க வேண்டும் என எனது உம்மத்தவர்கள் ஆசைகொள்வார்கள் என நபியவர் கள் கூறினார்கள். (நூல்: அபூயஃலா)
    இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜரீர் இப்னு அய்யூப் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும், இது பலஹீனமானது என்பதை இமாம் இப்னு குஸைமா (ரஹ்) மேல் கூறியவாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.


  4. - நோன்பாளியின் தூக்கம் இபாதத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அல் ஜாமிஉஸ் ஸகீரில் (9293) குறிப்பிடுகிறார்கள். இதில் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்பா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் ஸைனுத் தீன் அல் ஈராகி (ரஹ்) இமாம் பைஹகி (ரஹ்) இமாம் சுயூத்தி (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்பிர்தவ்ஸ் 4/248) (இந்தச் செய்தியை வைத்தே சிலர் பகல் முழுவதும் தூக்கத்தில் காலத்தை கழிக்கிறார்கள்)


  5. எவர் ரமழானில் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழுகிறாரோ அவர் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொண்டவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் இஸ்பஹானி). இது முர்ஸல் எனும் பலஹீனமான செய்தியாகும். இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்களின் கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு குஸைமாவில் வரும் இச்செய்தியில் உக்பத் இப்னு அபீல் ஹஸ்னா என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என அறியப்படாதவர். பலஹீனமானவர் (மஜ் ஊல்) என இமாம் இப்னு முதீனி (ரஹ்) கூறுகிறார்


  6. நோன்பு பொறுமையின் பாதியாகும் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: திர்மிதி, இப்னுமாஜா).
    இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் மூஸா இப்னு உபைதா என்பவர் பலஹீனமானவர் என அஷ் ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) குறிப்பிடுகிறார்.


  7. நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ: அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வலாரிஸ்திக அப்தர்து’ என்று வரும் ஹதீஸ் அபூதாவூத் (2358) மற்றும் இப்னு ஸுன்னு பிஅமலில் யவ்மி வல்லைலா (481) எனும் நூலில் பதிவாகியுள்ளது.
    இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் மலிக் பின் ஹாரூன் பின் அன்தரா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் அஹ்மத் (ரஹ்) தாரகுத்னி (ரஹ்) இமாம் அபூ ஹாதம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
    இது உறுதியான செய்தியல்ல என இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) குறிப்பிடு கிறார்கள். (நூல்: ஸாதுல் மஆத் (2÷54)

Thanks.

- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

சனி, 14 ஆகஸ்ட், 2010

நோன்பின் ஒழுக்கங்கள்

ஐவேளைக் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும். மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.
உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.
மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம். ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.

ஸஹர் உணவை ஃபஜ்ருக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரைப் பிற்படுத்துவதும் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துவதும் நபிவழி ஆகும்.

பழுத்த பேரீத்தம்பழம் அது கிடைக்காவிட்டால் சாதாரணப் பேரீத்தம்பழம் அதுவும் கிடைக்காவிட்டால் தண்ணீர் அதுவும் கிடைக்காவிட்டால் கிடைக்கும் ஏதேனும் ஓர் உணவைக்கொண்டு நோன்பைத் திறக்கலாம். எதுவுமே கிடைக்காவிட்டால் உணவு கிடைக்கும் வரை உள்ளத்தில் நோன்பு திறந்ததாக எண்ணிக்கொள்ளவும்.

நோன்பாளி வணக்க வழிபாடுகளை அதிகமாக்கிக் கொள்வதும் தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டு தவிர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.
பொய் பேசுதல் புறம்பேசுதல் ஏமாற்றுவது வட்டி கொடுக்கல் வாங்கல் செய்வது தடை செய்யப்பட்ட சொல் செயல் அனைத்தையும் விட்டு விலகியிருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பாவமான சொல்லையும் அதைக் கொண்டு செயல்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தன் உணவையும் குடிப்பையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.

புதன், 11 ஆகஸ்ட், 2010

ரமலானின் முதல் பத்து நாட்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு முதலாவது பத்து நாட்களில், அதிகமதிகமாக அல்லாஹ்விடம் துவாச் செய்து அவனால் வழங்கப்பட்ட உயிர், பொருள், இதர செல்வங்கள், கல்வி, அறிவு, ஆற்றல்கள், திறமைகள், பார்வை, செவி, புலன், நுகர்தல், உணர்தல் போன்ற அனைத்து விதமான அருட் கொடைகளையும் நினைவு கூரவும் அவற்றிற்கு முறையாக நன்றி செலுத்திடவும் அதன் மூலம் மேலும் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அதிகமதிகமான அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெறவும் முயல வேண்டும்,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கு அல்லாஹ்வினால் சிறப்பாக வழங்கப்பட்ட (ஈமான்) எனும் இறை நம்பிக்கை' என்ற அருட்கொடைக்கு மட்டுமே கோடி கோடி நன்றி செலுத்தினாலும் காலமெல்லாம் அவனைப் புகழ்ந்தாலும் ஈடாகாது. ஏனெனில் ஈமான் என்ற இணையற்ற அருட்கொடை இல்லா விட்டால் நாம் பெற்றுள்ள இதர எந்த வளமும் உண்மையில் அருட்கொடையில்லை எனலாம்.
இறை நம்பிக்கை இல்லாத நிலையில் செல்வம் எனும் அருட் கொடை அதிகமானால் அவனை அது வழி கேட்டிற்கும் தீமைகளுக்கும் இட்டு சென்று விடும் வாய்ப்புகள் உண்டு. கல்வி மற்றும் அறிவு எனும் அருட்கொடைகள் ஆக்கத்தையும் அழிவையும் பிரித்துணராமல் கேடாக அமைந்திட வழிவகுக்கும் அபாயம் உண்டு. உடல் அழகு, வலிமை, திறமை, ஆற்றல்கள், அதிகாரம் போன்றவை ஈமான் எனும் இறை நம்பிக்கையில்லாத நிலையில் கிடைக்கப் பெற்றால் அவற்றைத் தவறான வழியில் மனோ இச்சையின்படி ஈடு படுத்திட அதன் மூலம் தமக்கும் தம்மை சுற்றியிள்ளோருக்கும் கேடும் இழப்பும் ஏற்படுத்திட வாய்ப்புகள் அதிகம். ஈமான் (இறைநம்பிக்கை) மற்றும் இறையச்சம் என்பதுதான் உண்மையில் அருட்கொடை.
Thanks.
சத்தியமார்க்கம்

புனித ரமலானில் நாம்.

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலான் மாதம் நம்மிடத்திலே வருகைதந்து இருக்கின்றது. கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது,
நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஒரு சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது.


கடமையான ஐவேளை தொழுகைகளையே தொழாதவர்கள், பள்ளிகளில் சென்று ஜமாத்தோடு தொழாமல் வீடுகளில் தொழுது கொண்டிருந்தவர்கள், உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழவும் பள்ளிக்கு பாங்கு சொன்ன உடன் அல்லது பாங்கிற்கு முன்னரே வருகை புரிந்து தொழுகைக்குக் காத்திருந்து, பள்ளியில் குர்ஆன் ஓதிக் கொண்டும் உபரியான தொழுகைகள் தொழுது கொண்டும் கடமைத் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கும் நிலையையும் காணலாம்.


இந்தப் பக்திப் பரவச நிலை புனித ரமலானில் மட்டுமின்றி ரமலானுக்கு பின்னரும் தொடர்ந்து கடைப்பிடித்திட அல்லாஹ் அருள் புரிவானாக...

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

மீண்டும் உங்களிடம்...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

அன்புள்ள சாகோதரர்களே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...

அலுவலக வேலையின் காரணமாக நீண்ட காலமாக என்னால் பதிவு போட முடியவில்லை. இந்த ரமலானில் ரமலான் சம்பந்தமாகவும், பிரார்த்தனை, தொழுகை அதன் மூலம் நாம் அடையக்கூடிய பயன் போன்றவற்றை என்னால் முடிந்த அளவு பதிவிடுகிறேன். தங்களது ஆலோசனைகளை பின்னுட்டத்தில் தெரியப்படுத்துங்கள்...

நன்றி...

ஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது?

அல்லாஹ் தன் திருமறையில் 2:189 வசனத்தில் பிறைகளை பற்றி கூறும் போது இது மனித சமுதாயத்திற்கு காலம் காட்டி என கூறியுள்ளான். அத்துடன் 10:5 வசனத்தில் சந்திரனுக்கு மாறி மாறி வரும் படித்தரங்களை விதித்திருப்பதே பல வருடங்களின் கணக்கை அறிந்து கொள்வதற்காகத்தான் என கூறுகின்றான். இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1431 வருடத்துடைய ரமளான் மாதம் புதன்கிழமை (11.08.2010) துவங்குகிறது.

இதற்கு சான்றாக 1431 ரமளான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃபானுடைய மாதம் 30 நாட்களை கொண்டதாக உள்ளது. அதில் நாம் கண்களால் எண்ணிக்கொள்ளும் 29 படித்தரங்கள் உள்ளது. அதாவது ஷஃபான் மாதம் திங்கள்கிழமை (12.07.2010) துவங்கியது. அன்று முதல் தேதிக்குரிய பிறையை நாம் கண்களால் மேற்கு பகுதியில் பார்க்க முடியும்.
அதே போல் ஷஃபான் மாதத்தின் 29 வது நாள் திங்கள்கிழமை(09.08.2010) ஆகும். அன்றைய தினத்தின் பிறையையும் நாம் கிழக்கு பகுதியில் பஜ்ர் நேரத்தில் கண்களால் பார்க்க முடியும். ஆக மொத்தம் ஷஃபான் மாதத்தின் 29 பிறைகளை நாம் கண்களால் காணும் நிலை உள்ளது. 29 வது நாளுடைய பிறையை நாம் கிழக்கு பகுதியில் பார்க்க முடிவதால் அன்றைய தினம் சந்திரனுடைய சுற்று முடிவடையாமல் இன்னும் ஷஃபான் மாதத்தில் ஒரு நாள் மீதம் உள்ளதை நாம் அறிய முடிகிறது.

எனவே பிறை தெரியாத நாளான செவ்வாய் கிழமையை (10.08.2010) ஷஃபான் மாதத்தின் முப்பதாவது நாளாக எண்ணிக் கொள்ள நமக்கு நபி(ஸல்) அவர்கள் கற்று தந்துள்ளார்கள். வானஇயற்பியல் கணக்கின் படியும் அன்றைய தினம் தான் சூரியன் சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டிற்கு வந்து 1431ஷஃபான் மாதத்தின் சுழற்சியை முடித்து, 1431ரமளான் மாதத்திற்கான சுழற்சியை துவங்குகிறது என்பது ஆதாரப்பூர்வமான யாரும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

இது கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து பார்த்தால் புரியும். 29 வது நாள் கண்ணால் பார்த்த பிறகே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறுபவர்கள் கூட இந்த அறிவியல் உண்மையை மறுக்க முடியாது. எனவே இந்த லிங்கில் நிரூபிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மையை தவிர மற்றவைகளை கருத்தில் கொள்ள வேண்டாம். தகவலுக்காக மட்டும் இந்த லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

The Astronomical New Moon is on August 10, 2010 (Tuesday) at 3:08 UT.

நமக்கு நபி(ஸல்) அவர்கள் 29 வது நாளுடைய பிறையை பார்த்து மாதத்தை ஆரம்பிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாறாக சந்திரனின் அனைத்து படித்தரங்களையும், மன்ஸில்களையும் அறிந்து செயல்படுவது தான் குர்ஆன் ஹதீஸின் உடைய வழி முறையாகும். குழப்பமற்ற அல்லாஹ்வின் தெளிவான தீனுல் இஸ்லாத்தை சிந்திப்பவர்கள் மட்டுமே சரியாக புரிந்து செயல்பட முடியும்.

எனவே உலக மக்கள் அனைவரும் ஹிஜ்ரி 1431 ரமளான் மாதத்தை புதன்கிழமை (11.08.2010) அன்று துவங்கும் படி இந்திய ஹிஜ்ரி கமிட்டி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
நிர்வாகி
இந்திய ஹிஜ்ரி கமிட்டி
Thanks..

திங்கள், 31 மே, 2010

இந்த நிலை மாறுவது எப்போது?

1 அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2 பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3 வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4 பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5 ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6 நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.

8 மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10 பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்! 12 அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு. மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!

இந்த நிலை மாறுவது எப்போது?

மெயிலில் வந்தது

ஞாயிறு, 30 மே, 2010

உலக புகையிலை எதிர்ப்பு நாள் - மே 31


உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது
புகையிலையினால் ஏற்படுகிற வாய்ப்புற்று நோய் கொண்ட நோயாளிகள், உலகிலேயே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே 56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.
90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.


இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.

இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்பு ஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.


புகையிலையை தவிர்ப்பதால் ஒரு விடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது.


புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில் பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால் கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர் நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும் கொல்லப்படுகின்றர்)
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


எல்லாவற்றிக்கும் மேலாக ஒவொரு உயிரையும் தனது ஆயுள் முடிவதற்குள் தாமாகவே முடித்துக்கொள்ள முயலுகிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தற்கொலை செய்து கொள்கிறோம்.


இதில் தாம் மட்டும் இன்றி தம்மை சார்ந்து நிற்கும் மற்றவர்களையும் பதிப்புக்கு உள்ளாக்குகின்றோம். புகை பிடிப்பவரைவிட அதான் அருகில் நிற்பவர் அதிகம் பாதிக்கப்படுகிறார் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

மற்றவர்கள் புகைத்து வெளிவரும் புகையில் 4000 ற்கு அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 50 புற்றுநோயை ஏற்படுத்துவையாகும்.


தான் உயிரை தானே முடித்துக்கொள்ள அனுமதி இல்லாத பொது தன்னுடிய சுய நலதுக்காக் அடுத்தவர்களை பலிகொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.
வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் காற்றில் புகையின் செறிவு அதிகமாகும். இதனால் ஒருவரது மனைவி, குழந்தைகள், வீட்டில் உள்ள முதியவர்கள் என எல்லோரையும் பாதிக்கும்.

புகையை சுவாசிக்கும் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் ஆபத்துண்டு. அவர்கள் நிறை குறைந்த குழந்தைகளாகப் பிறப்பர்.

புகைத்தல் / புகையிலை பயன்பாட்டினை தவிர்க்க சில ஆலோசனைகள்

1 . சிகரெட் சாம்பல் போடும் தட்டுகள், பான், ஜர்தா போன்றவற்றை கண்ணிற்கும், மனதிற்கும் மறைவாக வைக்க வேண்டும்

2. சுவிங்கம், இனிப்புகள், பெப்பர்மென்ட் மிட்டாய்கள், சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்ளுதல்

3. எப்பொழுதெல்லாம் புகையிலை, பான் போன்றவை நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில், மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது புகைப்பழக்க எண்ணத்தை குறைக்க உதவுகிறது

4. புகையிலை எடுக்க நீங்கள் நினைக்கும்போது, உங்கள் குழந்தைகள் பற்றி சிந்தியுங்கள். மேலும், புகையிலையினால் நோய் ஏற்படின், அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதனை சிந்தனை செய்து பாருங்கள்

5. புகையிலை பழக்கததினை விடுவதற்கு உங்களால் முடியும் என உறுதியாக நம்புங்கள்.

சனி, 29 மே, 2010

செம்மொழி மாநாட்டுப் பாடல் - வீடியோ

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான செம்மொழி மாநாட்டுப் பாடல் வீடியோ உங்களுக்காக

வியாழன், 27 மே, 2010

சாதிக்க பிரபலமான பள்ளி தேவையில்லை: நிரூபித்தார் மாநகராட்சி பள்ளி மாணவி:


பிரபலமான பள்ளியில் படித்தால் தான் சாதிக்க முடியும்; அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை கருத்தை, நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்த்தெறிந்து, மாபெரும் சாதனை படைத்துள்ளார். தனியார் பள்ளிகள் மீது, பொதுமக்களுக்கு மோகம் அதிகமாக இருக்கிறது. அந்த பள்ளிகளில் மட்டுமே, குறிப்பாக மிகப்பெரிய பள்ளிகளில் மட்டுமே, தரமான கல்வி வழங்கப்படுகிறது. அந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் தான், எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்ற கருத்து, பொது மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இதனால், அவரவர் வசதிகேற்ப தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். பெரும்பாலான பள்ளிகள் தரமான கல்வியை வழங்கினாலும், மக்களிடமுள்ள மோகத்தை பயன்படுத்தி, காசு பார்க்கும் பள்ளிகள் அதிகம் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாநில அளவிலான ரேங்க்குகளையும், பாட வாரியான ரேங்க்குகளையும், அதிகம் பெற்றவர்கள் கிராமப்புற மாணவர்கள் தான். நகர்ப்புறங்களிலுள்ள மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பெரிய பள்ளி என்று படையெடுப்பவர்களின் கண்களை திறக்கும் வகையில், சாதிப்பதற்கு பள்ளி முக்கியமல்ல; உழைப்பு தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார், நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், இவர் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

பெரிய தனியார் பள்ளிகளிலுள்ள கட்டமைப்பு வசதிகள், உயர்ந்த கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்கள், பல்வேறு வகையான கற்பிப்பு முறைகள் ஆகியவை மாநகராட்சி பள்ளிகளில் இருக்குமென கூற முடியாது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஓரளவுக்கு தான் வசதிகள் இருக்கும். முக்கியமாக, படிப்பில் சுமாரான மாணவர்கள் தான், அரசு பள்ளிகளில் சேர்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள் அட்மிஷன் கொடுப்பதில்லை. மாறாக, மிக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அட்மிஷன் கொடுத்து, அவர்கள் சாதனையை, தங்கள் சாதனையாக பள்ளிகள் பறைசாற்றி கொள்கின்றன. இதற்கு மத்தியில், சாதாரண பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும், அதற்கு ஈடுபாடும், முழுமையான உழைப்பும் மட்டுமே தேவை என்பதை எடுத்து காட்டியுள்ளார் ஜாஸ்மின்.

நன்றி: தினமலர்

ஞாயிறு, 23 மே, 2010

A.R.ரஹ்மான் இசையில் தமிழ் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு பாடல்.. ஆடியோ





பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் -
உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி அய்யன்
வள்ளுவரின் வாய்மொழியாம்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம்மொழி நம் மொழி -அதுவே
செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே

செவ்வாய், 18 மே, 2010

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம்

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சி:இப்பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:
இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:
டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?
விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,
42/25,ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ்,இரண்டாவது தளம்
(வி.ஜி.பி. அருகில்),அண்ணா சாலை,
சென்னை -600 002.
தொலைபேசி:044- 2852 7579,2841 4736,98401 16957.
சி.ரங்கநாதன், இயக்குநர்,
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர்,

புதன், 12 மே, 2010

தோற்பவர்கள். வெற்றி பெறுபவர்கள். நாலு வித்தியாசங்கள்.

தொடர்ந்து தோற்பவர்கள், ஒரு வெற்றி பெறுபவர்கள் இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்கள். அவை என்ன தெரியுமா? தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?

தோல்வியாளர்கள்.

இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது.

சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள்.தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை.

அப்படி முயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வை வளர்த்துக் கொள்கிறார்கள்.

தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவிக்க இவர்களுக்குத் தெரியாது. “ஏதோ செய்யறோம்! பார்க்கலாம்” என்பார்கள்.

“உங்கள் கனவுகள் என்ன?” என்று திரும்பத் திரும்பக் கேட்டால் ஒரு கொட்டாவியைத் தான் பதிலாகத் தருவார்கள்.

தங்கள் முயற்சிகளை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னால், எழுதுவார்கள். வரிசைப் படுத்துவார்கள். முதல் அடிகள் சிலவற்றை எடுத்து வைப்பார்கள்.

போகப் போகக் கைவிடுவார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.

வெற்றியாளர்கள்

இவர்கள் துணிச்சல்காரர்களாய் இருக்கிறார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட திறமை, திறமை மீது நம்பிக்கை இரண்டும் இருக்கிறது.

சில விஷயங்களுக்கு பயந்தாலும் உலகம் ஓர் அற்புதமான இடமாக இவர்களுக்குத் தெரிகிறது.

எதிர்காலம் பற்றிய தெளிவான காட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை, சுயகௌரவம் கொண்டு வாழ்கிறார்கள்.

தங்கள் இலட்சியங்களை மதிக்கிறார்கள். அவை நிச்சயம் வெல்லும் என்று மனதார நம்புகிறார்கள். அதைக் குறித்து உற்சாகமாய்ப் பேசுகிறார்கள்.

தங்கள் வாழ்க்கைப் பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் உண்டு.

கனவுகளை அடைவதற்கான நடைமுறைகள் பற்றிய தெளிவும் உண்டு. பல மகத்தான இலட்சியங்களை எளிய மனிதர்களால் எட்ட முடியும் என்கிற உறுதி கொண்டு வாழ்கிறார்கள்.
தங்கள் கடமைகளைக் காகிதத்தில் நிரல்பட எழுதுவதோடு நடைமுறைப்படுத்தவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

முதல்படியில் இருந்த உற்சாகம், முழுமையான அளவில் வளரும்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள் இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

Thanks - பாணபத்திரன்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

சென்னை - சிங்கம்ல.....

தோணி, ரெய்னா அதிரடி ரன் மழையில் மும்பையை துவம்சம் செய்து கோப்பையை கைபற்றியது சென்னை




சென்னை எல்லாம் சும்மா மொதல்ல செமிக்கு வர்றாங்களான்னு பார்க்கலாம் சொன்னாங்க

அப்புறம் செமிக்கு வந்தது உங்க லக் பைனலக்கு போக முடியாதுன்னு சொன்னாங்க

அப்புறம் மும்பை செம பார்ம்ல இருக்கு ஒங்கள ஓட ஓட விரட்டுவாங்க பாருங்க என்றல்லாம் சொன்னவங்க. இப்ப எங்க ஓடி ஒளிஞ்சிருக்குங்கன்னு தெரியல

நாங்கல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றஆளு

ஐ பி ல்-லில் யர் முன்னாடி பைனலுக்கு போறாங்க என்பது முக்கியம் இல்லை

யாரு ஐ பி ல் கப்பை எடுத்துட்டு போறாங்க என்பது தான் முக்கியம்...


என்னதான் சச்சின் மாஸ்டர் பேட்ஸ்மேனா இருந்தாலும் சிங்கத்தை சீண்டினால் அவ்வளவுதான்.

அசந்தா அடிக்கறது உங்க பாலிசி

அசராம அடிக்கிறது எங்க (சென்னையின்) பாலிசி...

நாங்கல்லாம் பொங்களுக்கே வெடி வெடி வெடிப்போம்
தீபாவளி அதுவும் சும்மா விடுவோமா எண்ண...

சிங்கம்ல..

புதன், 21 ஏப்ரல், 2010

நாம் நாமாக இருப்போம்..

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம். பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.

"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.

"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.

"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

நன்றி: ஹிதாயத்

புதன், 14 ஏப்ரல், 2010

ரிலாக்ஸ் ப்ளீஸ் -

இவை அனைத்தும் எனது மெயிலில் வந்தது. எனக்கு பிடித்தது


செய் அல்லது செத்து மடி – காந்தி சொன்னது.

படி அல்லது படுத்து தூங்கு -- யார் சொன்ன எண்ண. நல்ல இருக்குல பாலோ பண்ணு...

------------------------------

கொசுவை கொள்ள புது வழி.

கொசுவை கட்டி பிடிச்சு ஐ லவ் யூ சொல்லுங்க. அவமானம் தாங்காம அதுவே தற்கொலை பண்ணிக்கும்.

---------------------------

நைட்ல தூக்கம் வரலையா போய் கண்ணாடிய பாருங்க மயக்கமே வரும்.

தப்ப நினைக்காதிங்க இதுக்கப்பேர் தான் அழகுல மயங்குறது..

----------------------

எப்பலாம் உலகம், சூன்யமாவும், இருட்டாவும் தெரியுதோ, அப்பலாம் என் கைய பிடிச்சுக்கோ. உன்னை நான் பத்திரமா

வாசன் ஐ கேர் கூட்டிட்டு போறேன்

-------------------------------------

ஒரு விகடன் ஜோக்



அண்டை நாட்டு மன்னன் அனுப்பி வைத்துள்ள அழகு புறவே வா.. வா..
உன்னை வறுக்க வறுக்க என மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்...

சனி, 10 ஏப்ரல், 2010

தற்கொலை - சிறுகதை

வேலுவும் விஜியும் கனவண் மனைவிகள்அவர்களது மகன் சுந்தர்ராஜன் 6ஆம் வகுப்பு படிக்கின்றான்.அவனுக்கு சுந்தர் என்றால் மிகவும் பிடிக்கும் அவர்களுக்கும் திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை என்பதால் அவனிடம் இருவருமே மிகவும் அன்பாக இருந்தனர். வேலுவிற்கு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது, மராமத்து செய்வது போன்ற வேலை தினமும் அதி காலையில் எழுந்து வேலைக்கு சென்றால் மீண்டும் வீடு திரும்ப இரவு மணி ஆகிவிடும்.எவ்வளவு லேட்டா வந்தாலும் வந்து தன் மகனை பார்க்காமல் அவனை கொஞ்சமல் தூங்க மாட்டான்.

அவனுக்கு தன் மகனை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைத்து ஒரு நல்ல வேலையில் சேர்த்துவிட வேண்டும். தான் பார்க்கும் இந்த தொழிலில் அவனையும் ஈடுபடுத்த கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அவனை படிக்க வைத்தான். சுந்தரும் அப்பாவின் ஆசைகளையும் தனக்காக அவர் படும் சிரமங்களையும் உணர்ந்து நன்றாக படிதான்.

பள்ளிக்கூடம் சென்ற நேரம் போக விடுமுறை நாட்களில் அப்பாகூட வேலைக்கு செல்வது அவனது பொழுதுபோக்கு. அப்பாவிற்கும் மகன் தன் கண் எதிரிலேய இருப்பது மகிழ்ச்சியை கொடுக்க அவரும் அவனது லீவு நாட்களில் அவனை அழைத்து செல்வார். ஒரு நாள் அவர் மேலே ஏறி உத்திரத்தில் ஏறி அதில் உள்ள தேவையற்ற ஆணிகள், கொக்கிகள் ஆகியவற்றை அப்புரப்படுத்திக்கொண்டிருந்தார். தீடிரென்று கை வழுக்கிவிட கையில் உள்ள சுத்தியல் நழுவி கீழே விளையாடிக் கொண்டிருந்த அவனது மகனின் தலயில் விழுந்தது.

பதறியபடி அவனை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் பயப்படும் படி ஒன்றும் இல்லை எனவும் தலையில் அடிபட்டு இருப்பதால் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளவும் என கூறினார். இது நடந்த சில வருடங்களுக்கு பிறகு தீடிர் தீடிரென்று அவனது தலையில் கடுமையான வலி ஏற்படும் அப்போதெல்லாம் அவன் படும் கஷ்டங்களை பார்த்து வேலு மிகவும் துடி துடித்து போய்விடுவான். தன் பிள்ளை தன் கண் எதிரிலேய இப்படி கஷ்டப்படுவதை பார்த்த அவனது தாயும நாளாக நாளாக நோய்வாய்ப்பட்டு போனால்.

இதுபோல் வழியும் அதிகமாக ஆரம்பித்தால் அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னால் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தினாலும் தன்னால் தனது குடும்பம் முழுவதும் கஷ்டபடுவதை காண முடியாது யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில்

லெட்டர் எழுதிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பூசிமருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டான்.வீட்டிற்கு வந்த இருவரும் தன் மகன் இறந்து கிடந்ததை பார்த்த இருவரும் கதறி அழுதனர். பின் அவன் கையில் உள்ள கடிதத்தை வேலு பிரித்து பார்த்தன். அதில் இப்படி எழுதி இருந்தது
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
இதுக்கு தான் சொல்லுறது " ஆணியே புடுங்க வேண்டாம் "னு

ரொம்ப நாளா மொக்கை போடலாம்னு ஆசை அதான் இப்படி..
:) :) :)

திங்கள், 5 ஏப்ரல், 2010

வேண்டாம் இனி பூமி வெப்பமயமாதல் : விடை கொடுக்கும் இன்போசிஸ்

பூமி வெப்பமயமாதலை குறைக்கும் உலகளாவிய முயற்சியில் தன் பங்காக பெங்களூரு இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

'உலகில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனம், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனம்' என மற்ற நாடுகளால் மதிக்கப்படுவது, இன்போசிஸ் நிறுவனம். கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களை உருவாக்கி, உழைப்புக்கு உதாரணமாய் கூறப்படும் நிறுவனம், தற்போது நவீன தொழில்நுட்பங்களால் பூமி சூடாவதைக் கண்டு, அதைக் குறைக்க தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது. அதில் உதயமானது தான், 'கிரீன் இனிஷியேட்டிவ்' என்ற 'பசுமை முனைப்பு' திட்டம்.


இத்திட்டத்தின் தலைவர் ரோஹன் பரேக், எக்ஸ்கியூட்டிவ் திகு ஆறுச்சாமி ஆகியோர் நமது நிருபரிடம் கூறியதாவது:வெப்பமயமாதலுக்கு எங்கள் அலுவலக கட்டடங்களில் உள்ள மின் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், மாசு போன்றவையும் ஒரு காரணம் என நினைக்கிறோம். எங்களது பெங்களூரு அலுவலக கட்டடங்களில் மட்டும் 22 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணம். எனவே, வெப்பமயமாதலை தடுக்க, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.எங்கள் நிறுவன தலைவராக நந்தன் நிகலேனி இருந்தபோது, 2008ல் இத்திட்டம் துவக்கப் பட் டது. மைசூருவில் உள்ள எங்கள் கட்டடங்கள் முற்றிலும் 'பசுமை கட்டடங்களாக' வடிவமைக்கப் பட்டது. இப்போது நாட்டின் எந்த பகுதியில் இன்போசிஸ் கட்டடம் உருவாக்கினாலும் அவை வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்படுகிறது.
மின் சேமிப்பு: மின்சாரத்தை சேமிக்க மின் விளக்குகளை 'எல்.இ.டி.,' விளக்குகளை மாற்றுகிறோம். இதனால், மின் சேமிப்பு அதிகரிக்கும். பகல் நேரங்களில் அதிக அளவு சூரிய வெளிச்சம் அறைகளுக்குள் நுழையும் விதமாக கட்டடம் கட்டப்படுகிறது. எனவே மின் விளக்கு தேவைப்படாது. போதிய வெளிச்சம் இருந்தால், இயல்பாகவே மின்விளக்கு எரியாத வகையில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதே போல, அறையில் ஆட்கள் இல்லாவிட்டால் தானாகவே அணையும் விளக்குகளை பொருத்துகிறோம்.


தண்ணீர்: வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாகுறையும் ஏற்படுகிறது. இனிமேலும் தண்ணீரை வீணாக்க கூடாது. அனைத்து தண்ணீர் தேவையையும் மழை நீர் சேகரிப்பு மூலம் நிறைவேற்ற உள்ளோம். கழிவு நீரை சுத்திகரித்து, கழிப்பறை, தோட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்துகிறோம். மைசூரு வளாகத்தில் மழை நீரை சேகரிக்க, மூன்று செயற்கை ஏரிகளை உருவாக்கி உள்ளோம். மொத்த தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை இந்த ஏரிகள் நிறைவேற்றும். ஐதராபாத் வளாகத்தில் மொத்தம் 19 குளங்களை வெட்ட உள்ளோம். இவற்றில் நான்கு முடிந்துள்ளன. அந்த வளாகத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் பணிபுரிவர். சென்ற ஆண்டு ஒரு நாள் பெய்த மழையிலேயே நான்கு குளங்களும் நிரம்பி விட்டன.


பசுமை மின்சாரம்: பசுமை மின்சாரம் என்பது, நிலக்கரி, அணுசக்தி போன்றவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படாமல், மாசு ஏற்படுத்தாத நீர் மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவது. இதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே சிறு காற்றாலைகளை வைத்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. சக்தியை வீணாக்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டும். ஒரு சதவீத மக்களின் மனம் மாறினால் கூட பெரிய சேமிப்பு கிடைக்கும். சக்தியை சேமிப்பதில் நாங்கள் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்கிறோம். இதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுடன் பேசுகிறோம்.
கட்டடங்களில் வெப்பத்தை குறைக்க பல தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம். குளிர்ச்சியை ஏற்படுத்துவது என்பதே, 'ஒரு பொருளில் உள்ள வெப்பத்தை வெளியே எடுப்பது தான்'. கட்டட சுவர்களுக்குள் ராக் உல், கிளாஸ் உல், ஸ்டைரோபோம் போன்ற பொருட்களை வைத்து கட்டினால், வெளி வெப்பம் உள்ளே வராது. அறையில் வெப்பம் குறைவாக இருந்தால், 'ஏசி' அதிகம் தேவைப்படாது.ரசாயன பூச்சு உள்ள கண்ணாடிகளை ஜன்னல்களில் பயன்படுத்தினால் சூடு உள்ளே வராது. புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்களை இவை தடுத்து விடும். இதனால் வெளிச்சம் மட்டுமே அறைக்குள் ஊடுருவும்.


கட்டட சுவர்களில் நேரடியாக சூரிய கதிர்கள் படுவது போல் கட்டக் கூடாது. கட்டடத்தின் மேலே, பளபளப்பான பூச்சு பூசப்பட்ட தடுப்பு வைக்கிறோம். இதில் பட்டு தெறிக்கும் ஒளி, மேலே சென்று இன்னொரு தடுப்பின் மீது பட்டு, திரும்பும். இப்படியே ஒளியை திருப்பி, அறைகளுக்குள் அனுப்பலாம். இந்த ஒளியில் வெப்பத்திற்குப் பதில் வெளிச்சம் மட்டுமே இருக்கும். இப்படி எல்லாம் கட்டடங்கள் கட்ட ஆரம்பத்தில் சற்று செலவு அதிகமானாலும், பின் சில ஆண்டுகளில் மின்சேமிப்பால் அதிக பலன் கிடைக்கும்.


கம்ப்யூட்டர்கள்: கம்ப் யூட் டர்கள் வெப்பத்தை உமிழுவதை தடுக்க, 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர்களின் மானிட்டர்கள் தானாகவே அணைந்து விடும் வகையில், அமைத்துள்ளோம். இதன் மூலமும் மின்சாரம் சேமிக்கப்படும். ஊழியர்களுக்குள் 'ஈகோ கிளப்' (சுற்றுச்சூழல் சங்கம்) ஏற்படுத்தி உள்ளோம். இவர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்ற ஆண்டு மட்டும் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். பறவைகளை ஈர்ப்பதற்காக எங்கள் வளாகங்களில் இப்போது உள்ளூர் மரக்கன்றுகளைத் தான் நடுகிறோம். மங்களூரு வளாகத்தில், அழிந்து வரும் தாவர இனங்களை காப்பாற்றி வளர்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


பேட்டரி கார்: மாசுக் கட்டுப் பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களை இவர்கள், வளாகத்தின் உள்ளே அனுமதிப்பதில்லை. வளாகத்தின் உள்ளே, வாகனங்களை தொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஏராளமான சைக்கிள்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை எடுத்துக்கொண்டு வளாகத்திற்கு உள்ளேயே சுற்றிவிட்டு, எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம். புகை மாசை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு. கட்டடம் கட்டும் போது, ஏதாவது மரத்தை அகற்ற வேண்டி வந்தால், அதை வெட்டாமல், வேரோடு அகற்றி, வேறு இடத்தில் மீண்டும் நட்டு, உயிர் கொடுக்கின்றனர். இதனால் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது.இப்படி சுற்றுச்சூழலை எந்த வழியில் எல்லாம் பாதுகாக்கலாமோ, அத்தனை வழிகளையும் உலகின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் செய்து வருகிறது.


புதிதாக கட்டடங்கள் கட்டும் தொழில் நிறுவனங்கள் இவர்களை பின்பற்றினால் சுற்றுச்சூழல் மாசுபடாது. குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிறுவனங்களுக்கும் லாபம்; நாட்டின் எதிர்காலத் திற்கும் நல்லது. வெப்பமயமாதலுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு இன்போசீஸ் வழிகாட்டுகிறது. எல்லா தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனி மனிதர்களும் விழிப்புணர்வு பெற்றால், 'பசுமை இந்தியா' என்ற நமது கனவு நிறைவேறும்.

வாழ்த்துக்கள் தொடரட்டும் இன்போசீஸ்-ன் சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்த சேவைகள் ...

செவ்வாய், 30 மார்ச், 2010

அளவோடு பேசு..

ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்தபோது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால்அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.

அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.

''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.

அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.

..மெயிலில் வந்தது..

சனி, 27 மார்ச், 2010

.:: பூமி தினம் ::.

உலகை அச்சுறுத்தி வரும் பருவநிலை சீர்கேட்டை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கையாக உலகம் முழுவதும் நேற்று பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.

பூமி நேரத்தையொட்டி இந்தியா முழுவதும் நேற்று பல இடங்களில் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து மக்கள் அதை அனுசரித்தனர்.

நாடு முழுவதும் பூமி நேரம் பரவலாக அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பெரும்பாலானோர் வீடுகளில் விளக்குகளை அணைத்து அனுசரித்தனர்.

மொத்தம் 100 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5 கோடி பேர் இதில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்த பூமி நேரம் அனுசரிப்பது தொடங்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. ஆண்டுதோறும் இது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பூமி நேரத்தை புறக்கணித்த கிரிக்கெட் உலகினர்...

இந்தியாவின் 80 சதவீத அளவிலான மின்சாரம் நிலக்கரியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ள ஒன்று இந்தியா. பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் நாமும் வெளியேற்றி வருகிறோம். இந்தியாவில் மின்சாரத்தின் மூலமான கார்பன் மாசுக்கள்தான் அதிக அளவில் வெளியேறுகின்றன. அதாவது பாதி புகை மாசு மின்சாரத்தால்தான் ஏற்படுகிறது.

பூமி நேரம் அனுசரித்துக் கொண்டிருந்தபோது பிரகாசமான விளக்கொளிக்கு மத்தியில் கிரிகெட் போட்டி சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.பூமி நேரத்தை விட போட்டி முக்கியம் என்று கருதிய ரசிகர்களும் அவர்கள் பூமி நேரத்தின்போது டிவிகளை அணைக்காமல் தொடர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் நாம் அதை தடுப்பதற்கான முயற்சியிலும் முன்னணியில் இருந்திருக்க வேண்டும்...

பூமி நேரத்திற்காக ஒரு நாள் கிரிக்கட் விளையாட்டை தள்ளிவைத்தால் அதில் ஈடுபட்ட யாருக்கும் நஷ்டம் ஏற்படபோவதில்லை அப்படி இருக்க இந்த பூமி தினத்தை முன்னிட்டு கிரிக்கட் போட்டிகள் ஒருநாள் ரத்து என்ற அறிவிப்பை IPL கிரிகெட் வாரியம் அறிவிதிருந்தால் இதன் மூலம் இந்த நாள் பற்றிய விழிப்புணர்வு பரவலாக எல்லா மக்களிடமும் ஏற்பட்டு எல்லரோயும் இந்த பூமி தினத்தில் பங்கேற்க செய்திருக்கமுடியும்.

ஆனால் பணம் பண்ணுவது மட்டுமே எங்களது தலையாய கடமை என்பதாக உள்ள மோடிக்கள். உலகம் எப்படி போனால் எங்களுக்கு எண்ண என்ற எண்ணத்தில் நேற்று கிரிகெட் விளையாட்டை நடத்தியுள்ளது மிகவும் கவலைக்குரியது.

நேற்று பூமிதினம் பற்றிய செய்தியை எங்களது அறையில் உள்ள நண்பர்களிடம் கூற முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து ஒத்துழைத்த அணைத்து நண்பர்களுக்கும் மேலும் இந்த நல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று நேற்று விளக்கை அணைத்து பூமி தினம் அனுசரித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

இன்றைய கால கட்டத்தில் Divx, FLV, MP4, MKV போன்று பல வீடியோக்கள், புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.

விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர்.ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோவையும் திறப்பது இல்லை. சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது.

இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.



VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.

இது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்கு http://www.videolan.org/vlc/ சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

உலக தண்ணீர் தினம் 22-03-2010

அன்பானவர்களே நாளை (22-03-2010) உலக தண்ணீர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந் நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் சுத்தமான நீருக்காக மக்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டிருப்பதாகவும், நாடு முழுவதும் சுத்தமானநீர் கிடைக்காத காரணத்தால் சுமார் நாலரை கோடி மக்கள் பல வியாதிகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், இந்த சுகாதார கேடுகள் வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

> ஏற்பட்டிருக்கும் இந்த பஞ்சம் சுத்தமான நீர் கிடைக்காத பஞ்சத்தால் ஏற்படவில்லை. ஆனால் சரியான இடத்தில், சரியான நேரத்தில் போதிய தரமான நீர் கிடைக்காததாலும், நீர் ஆதாரங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறியாதாலுமே ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை விவரிக்கின்றது. இது தவிர பெருகி வரும் தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ளதும், நீர் ஆதாரங்களை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்களை சரிவர நிறைவேற்றாததும் இந்த நிலைமைக்கு காரணமாகின்றது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது நீர் ஆதாரங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஒரு குடம் தண்ணீருக்காக நாள்தோறும் பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும் பல லட்சக்கணக்கான பெண்கள் இந்திய கிராமங்களில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

நம் ஆட்சியாளைர்களிடம் (அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்) தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஒரு நல்ல நீண்ட கால திட்டம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேலும் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கும் பொழுதெல்லாம், அதை நிரந்தரமாக யாரும் தீர்ப்பதில்லை. உதாரணமாக, ஆற்று நீர் கிடைக்காத போது நாம் கிணறு தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. கிணறுகள் வற்றியதும் ஆழ்துளை கிணறுகள் தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. இன்று ஆழ்துளை கிணறுகளும் வற்றியதும் கடல் நீரை குடி நீராக மாற்றவும், நதிகளை இணைக்கவும் மட்டுமே சிந்திக்கிறோம். மரம் நட்டால் தான் மழை பொழியும் என்று நம் அரசு என்ன தான் கரடியாக கத்தினாலும் நாம் அதை கவனிக்காமல் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்து வாணத்தையே அன்னாந்து அல்லவா பார்க்கிறோம்.

ஒரு சமயம் தென் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வந்த பொழுது, நீர் நிலைகளை ஆராய்ச்சி செய்ய வெள்ளையர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தனர். அப்பொழுது இருந்த அந்த நீர் நிலைகளின் பின்னலை (Network) பார்த்து அதிசயித்தனர். அதாவது, ராமநாதபுரத்தில் ஒரு குளம் இருக்கும். மழைக் காலத்தில் அந்த குளம் நிரம்பியதும், அந்த குளத்தில் இருந்து வடியும் உபரி நீர், வழிந்து சென்று அடுத்த ஊரில் இருக்கும் குளத்தை நிறப்பும். இது அப்படியே அடுத்த ஊருக்கும் தொடரும். இந்த முறையால், தண்ணீர் பிரச்சினை தீர்வதுடன் அதிக மழை பொழியும் பொழுது வெள்ளத்தையும் தவிர்க்கும். ராமநாதபுர மாவட்டம், முன்பு செழிப்போடு தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது? நாம் நம்முடைய குளாங்களை வனிக வளாகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆற்றையும், குளத்தையும் தூர் வாரும் ஒப்பந்த்தில் ஊழல் புரிந்திருக்கிறோம்

இயற்கை ஒரு புதையல் தான். ஆனால், எடுக்க எடுக்க குறையும் அமுத சுரபி அல்ல. இயற்கைகும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை நம்மால் தொட முடியாது. தொட முயன்றால் தோல்வி தான் கிடைக்கும். இயற்கை நமக்குக் கொடுக்கும் வளங்களை முடிந்த வரை சிக்கனமாக உபயோகிக்க பழக வேண்டும். இருப்பதை வைத்து மேலும் நம் வளங்களை பெருக்க வேண்டுமே தவிற, இருப்பதை உபயோகிக்க மட்டும் (அழிக்க) முயலக்கூடாது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை சார்ந்து தான் வாழ முடியும், வாழ வேண்டும். ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்தால் மற்றொரு இனமும் தானாக அழியும்.

இந்த பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு? இயற்கையிடம் இருந்து திருடுவதை விட்டு, நீர் நிலைகளைப் பெருக்கலாம். நீர் நிலைகளைப் பெருக்க நீரை சேமிப்பது மிக மிக அவசியம்.
இது மக்களுக்கான திட்டம். மக்களும் இந்த கொடுமையை நன்றாக உணர்ந்துள்ளனர். அதனால் அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நிச்சயமாக மக்கள் உதவுவார்கள். குளங்களை வனிக வளாகங்களாக மாற்றுவதை விட்டு, அவற்றை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் (ஊழல் இன்றி). இந்த திட்டம் நிறைவேற, சத்தியமாக அரசியலை கலக்க கூடாது. அதனால், மக்களும் தன் பங்கிற்கு, வீடுகள் தோறும் மழை நீரை சேமித்து வைக்கலாம். மேலும் நீரை சேமிக்க பல வழிகள் உள்ளது.
காலையில் பல் துலக்கும் பொது பைப்ஐ அப்படியே திறந்து வைப்பதற்கு பதிலாக ஒரு மக் அல்லது வாளியில் பிடித்து வைத்துக்கொல்ளலாம், தண்ணீர் குடிக்கும்போது தேவையான அளவு மட்டும் பிடித்து குடிக்கலாம், குளித்த , பாத்திரம் கழுவிய தண்ணிரை செடிகளுக்கு பயன்படுத்தலாம் இப்படி சின்ன சின்ன முறைகளினால் கூட நிறைய தண்ணீர் மிச்சமாகும்.

ஒரு நல்ல நீண்ட கால திட்டத்தை உருவாக்கி அதை கண்டிப்புடன் செயல் படுத்த வேண்டும். இப்படி ஒரு திட்டம் வந்தால், அதற்கு மிகப் பெறிய எதிரியாக ஊழல் மட்டுமே இருக்க முடியும். இதை முறியடிக்க, இந்த திட்டத்தை சமூக அக்கறையுள்ள சில அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம். வரயிருக்கும் தலைமுறைகள் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கிறது. எனவே தண்ணிரை சேமிப்போம் எதிர் கால தலைமுறையை பாதுகாப்போம்.



நன்றி:இணையம்.

வியாழன், 18 மார்ச், 2010

ஐ.ஏ.ஸ், ஐ.பி.ஸ் இலவசமாக படிக்கலாம் வாருங்கள்...

"ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை http://www.saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற மனிதநேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பெறலாம்" என்று அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கூறினார்.

மனிதநேய அறக்கட்டளை, சென்னை லியோ கிளப் ஆகியவற்றின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் கடந்த 10.03.2010 புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமி கலந்து கொண்டு பேசும் போது, "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளை எழுத ஆர்வம் இருந்து, அதேவேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இளைஞர்களை, போட்டித் தேர்வுகளை எழுத ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

பத்தாம் வகுப்பில் 450 மார்க் எடுத்தும் பொருளாதாரப் பற்றாக் குறையால் மேற்கொண்டு படிக்க முடியாமல் கல்வி மறுக்கப் படுவது அநீதியாகும். ப்ளஸ்-1 ப்ளஸ்-2 முதல் பள்ளிக் கல்வியையும் ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் பட்டங்களுக்கான பயிற்சிகளையும் இலவசமாக வழங்கும் மனிதநேய அறக்கட்டளையினரும் அதன் தலைவர் சைதை துரைசாமி அவர்களும் வாழ்த்துகளுக்கு உரியவர்கள்.

மனிதநேய அறக்கட்டளை ஆண்டுதோறும் 10ஆம் வகுப்புத் தேர்வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள் 50 பேரை தத்தெடுத்து, அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2, வகுப்புகளில் இலவசமாகப் படிப்பளித்து, அவர்களை ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளுக்குத் தயார்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 100 பேர் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இப்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்றனர்.

இணையதளத்தில் முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தேவையான புவியியல், அரசியல், அறிவியல், சமூகவியல், பொதுநிர்வாகம் ஆகிய பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெனரல் ஸ்டடிஸுக்குத் தேவையான புத்தகங்கள், தற்கால நிகழ்வுகள், பயிற்சி மையங்களின் வகுப்பறைகளில் ஆசிரியர் எடுக்கும் பாடங்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் பாடக்குறிப்புகள், வினா வங்கிகள் போன்றவையும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம்" என்று கூறினார்.

இணையத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் இப்பயிற்சி வகுப்புகளின் பாடங்கள், இலவசப் பயிற்சி வகுப்புகளில் நேரடியாகக் கலந்து கொண்டு பயன்பெற இயலாத கிராமீய மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

நன்றி .:: இந்நேரம் வலைத்தளம் ::.

செவ்வாய், 16 மார்ச், 2010

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

நன்றி:இணையம்.

சனி, 13 மார்ச், 2010

இந்தியர்களுக்கு இலவசமாக உணவளிப்பதர்காக ஒரு இணையதளம்

அன்பான சகோதரர்களே உலகில் பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 7000 அதிகம்

உலகத்தில் பசியால் வாடுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிக்கின்றனர்

இந்தியாவில் ஒரு நிமிடத்தில் 5பேர் பசியால் இறக்கின்றனர்

எனவே உங்கள் உணவுகளை வீணாக்காதீர்கள் மேலும்

இந்தியர்களுக்கு இலவசமாக உணவளிப்பதர்காக ஒரு இணையதளம் செயல்பட்டு கொண்டுள்ளது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த தளத்திற்கு சென்று ஒரு க்ளிக் செய்தால் போதும் நீங்கள் ஒருவருக்கு உணவு கொடுத்தவர் ஆகிவிடுவீர்கள்















அந்த இணையதளத்தின் முகவரி

www.bhookh.com

தினமும் ஒருவருக்கு உணவளிக்க இந்த பக்கத்தை உங்களது முதல் பக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்

புதன், 10 மார்ச், 2010

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் பகுதி - 3

அல்லாஹ்விடம் கேட்கும் துஆவின், இறை நினைவு கூர்தலின் (திக்ரின்) வரையறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அல்குர்ஆன் 7:55,205 திட்டமாகக் கூறுகின்றன. அவை வருமாறு:
(முஃமின்களே) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள், வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை (7:55)
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்கப் பணிவோடும், அச்சத்தோடும் உரத்த சத்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூறுவீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம் (7:205)
துஆவுக்குரிய அல்லாஹ்வின் நிபந்தனை: துஆ பணிவாகக் கேட்கப்பட வேண்டும். பணிவின்றி சப்தமாகக் கேட்பதே முதல் குற்றம்; வரம்பு மீறிய செயல். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து சென்ற நபிமார்களை இழுத்து இவர்கள் கேட்கும் துஆ நல்ல துஆவாக அல்லாஹ்வால் ஏற்கப்படுவதாக இருந்தால் நிச்சயமாக நபி(ஸல்) அதைக் கற்றுத் தந்திருப்பார்கள். மறைத்திருக்க மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இந்த துஆ சிறந்த துஆ என்றால், நபி(ஸல்) தனது தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றவில்லை என நபி(ஸல்) மீது குற்றம் சுமத்துகிறார்கள். தனது கண்காணிப்பில் தூதர் இருந்தார் என்று அல்லாஹ் 52:48ல் கூறி இருந்தும் நபியை எச்சரித்து இவர்கள் ஓதும் இந்த துஆவை கற்றுக் கொடுக்கும்படி கட்டளையிடத் தவறிவிட்டான் என்று அல்லாஹ்வையும் குற்றப்படுத்துகிறார்கள். 42:21, 49:16 இறைவாக்குகள் சொல்வது போல் இவர்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாகி இவர்களாக இந்த துஆவை கற்பனை செய்து அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
எனவே இது தெளிவான பத்துஆ (கெட்ட பிரார்த்தனை) அல்லாமல் துஆ அல்ல.இதை நன்கு அறிந்த நிலையில் மவ்லவிகள்(?) நபி(ஸல்) கற்றுத் தந்த மிக சுருக்கமான மேலான துஆவை அனைவரும் எளிதாக ஓத முடியும் என்பதால், தங்களுக்குக் கை மடக்கு (கூலி) கிடைக்காது என்ற பயத்தினாலேயே மிக நீண்ட இந்த பித்அத் (கெட்ட) பத்துஆவை இறையச்சமின்றி அரங்கேற்றி வருகிறார்கள்.
இறை தியானத்திலும் அல்லாஹ்வின் 7:205 கட்டளையைப் புறக்கணித்து நிராகரித்து விட்டு (2:39) கூட்டாக கும்மாளமிட்டு, சப்தமிட்டுக் கூத்தடிப்பதை திக்ர், இருட்டு திக்ர் என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் சாப்பிடுகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் கொள்ளை அடிக்கிறார்கள்

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் பகுதி -2

4. நபி யூஸுஃப்-ஸுலைஹா போல் வாழ்க!
1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. இந்த ஸுலைஹா யார்?
2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன் வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
அல்குர்ஆனே இவள் தவறு செய்து விட்டாள் என வர்ணிக்கிறது. தவறு செய்தவள், முன்னைய கணவனுக்குத் துரோகம் செய்தவள் நபியின் மனைவியாக முடியுமா?
4. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா?
5. திருமணம் நடந்ததாக ஆதாரமே இல்லாத ஒருவளை- ஒரு தம்பதியை குறிப்பிட்டு வாழ்த்தலாமா? இது முறையா?
பல தீமைகளைத் தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவியாக்க வேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
6. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப் பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற அவசியம் என்ன?
7. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
8. அஹ்ஸனுல் கஸஸ்-அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுஃப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?
இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்ச்சிகரமான மண விழாவில் புதுத் தம்பதியை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்எவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இந்த துஆவை ஓதாமல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த “பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீகைர்’-அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக… (நபிவழி துஆ அபூஹு ரைரா(ரழி) அறிவிக்கும், இந்த ஹதீஸ் அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
இந்த துஆவை மட்டும் ஓதினால் திருமணம் தடுக்கப்பட்டதாகி விடுமா? இல்லை பாவமான காரியமாகி விடுமா? இல்லை அல்லாஹ்வால் இந்த நிக்காஹ் புறக்கணிக்கப்பட்டு விடுமா?
(மவ்லவிகளை பதில் சொல்லுங்கள். இப்போதாவது உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறதா?)
ஒருபோதும் இல்லை என்பது அறிவு ஜீவிகளுக்கு நன்றாகவே புரியும். அப்படி இருந்தும் பல விதமான குழப்பங்கள் அடங்கிய-ஏன் குழப்பங்களே இல்லாமல் மிகவும் தெளிவாக (அல்லாஹ்வால் குர்ஆனிலே அவர்களைப் பற்றி சொல்லப்பட்டு) தவறு என்று விளங்கக் கூடிய இந்த பாவமான சாபக்கேட்டை நாமாகவே கேட்டுப் பெற்றுக் கொள்வதா?
அறிவு ஜீவிகள் புகுந்து பிரித்து அறியக்கூடிய ஜீவிகள் கேட்கிறார்கள். பல ஆண்டு காலமாக யாரும் இந்த துஆக்களை கேட்கவில்லையா? அவர்கள் எல்லோரும் நாசமாகி வாழ்க்கையில் சந்தோசமே இல்லாமல் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கி றார்களா? அவர்கள் ஒன்று சேர்ந்து வாழாமல் தான் போய்விட்டார்களா? அல்லது குழந்தை பாக்கியம் தான் இல்லாமல் போய்விட்டதா என்று? இது ஷைத்தான் அழகாகக் காட்டும் கேள்வியாகும். உங்களுக்கு நன்றாகவே தெரியும் கேட்கின்ற துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று; அதே வேளை சிலபேரின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவும் செய்கிறது என்று. இங்குதான் நீங்கள் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் கேட்கக் கூடிய அந்த (சாபக் கேடான) பத்துஆவை சில நேரம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும், மறுக்கவும் செய்கிறான்.
அப்படி இருக்க சாபக்கேடான இந்த துஆவால் நாசமானவர்களும் இருக்கலாம், மேலும் அல்லாஹ்வால் இந்த (சாபக்கேடு) பத்துஆ புறக்கணிக்கப்பட்டு நன்றாக இருப்பவர்களும் இருக்கலாம். இந்த சாபக்கேட்டை நாமாகவே கேட்டு பெற்றுக் கொள்வதை விட்டுவிட்டு இனிமேலாவது அல்லாஹ்வும் ரசூலும் கற்றுத்தந்த வழியில் துஆக்களை கேட்டு நன்மையைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்களேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி திட்டம் ஒரு ஆய்வு

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

திங்கள், 8 மார்ச், 2010

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் பகுதி-1

திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.

1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப் பட்டார்கள்.
4.பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக் கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழ வேண்டுமா?

2.நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க!
நூஹு(அலை), லூத்(அலை) ஆகிய இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்ககளின் மனைவிகளாக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைத் தூதர்களால்) அவ்விருவரையும் இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இருவரும் நரகிற்குச் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (66:10)
இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது. இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரக வாசியாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிரகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரகவாசியான மனைவியோடு வாழ்வது போல் வாழ்க என வாழ்த்தலாமா?

3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க!
இப்றாஹீம் நபி-ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை) குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா?
நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார் என அல்குர்ஆன் 11:71,72 கூறுகிறது.
வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத்தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்தத் தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தைப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பார்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா?

தொடரும்....

குஜராத்திலிருந்து முஸ்லிம்களை துடைத்தெறிய முயலும் மோடி!

குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை பயங்கரவாத முதலமைச்சர் என்றே அழைக்கின்றனர். இவர் தலைமையில் அரசு அமைந்த நாள் முதல், குஜராத்தில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கெல்லாம் வசித்து வருகிறார்கள் என்ற கணக்கெடுப்பை எடுத்து வருகிறார். இதற்கு முன்னர் 1999 ல் இவரது கணக்கெடுப்பை உயர்நீதி மன்றம் தடுத்து நிறுத்தியது. சட்டத்தை மீறுவது என்பது இந்துத்துவவாதிகளுக்கு வழமையான விடயம் என்பதால் இப்போது மீண்டும் துவங்கி விட்டார்.

இப்போது, முஸ்லிம்கள் எப்படி வாழ்கிறார்கள்? எங்கெல்லாம் பரவி வாழ்கிறார்கள் என்று கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இருக்கிறார். இதேப் போல் மற்றொரு சிறுபான்மையினமாகிய கிறிஸ்தவர்களின் கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. இதனை 1949 ம் ஆண்டிலிருந்து துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்புகளின் நோக்கம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இல்லாத குஜராத்தை உருவாக்குவதே. மேலும் முஸ்லிம்களின் பொருளாதர நிலை குறித்து ஆய்வு செய்யவும் மோடி பணித்துள்ளார். நிலத்தை வாங்கி விற்பவர்களின் கூட்டமைப்பு கூட, முஸ்லிம்களுக்கு நிலத்தை விற்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதுபோல அரசியல் சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாமல் போனது ஏன்? என்று தெரியவில்லை. குஜராத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களையும் கணக்கெடுக்கவும் மோடி அரசு தவறவில்லை.

இதற்காக மோடி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சேத்னா என்பவரை நியமித்துள்ளார். இந்த சேத்னா, 2004 ல் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை தீ வைத்து கொளுத்திய 21 பேரை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்தவர்.

குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஜோஹ்புராவில் எந்த அடிப்படை வசதியும் செய்திடாமல் வதைத்து வருகிறார் மோடி. இந்துத்துவா சிந்தனையின் சோதனைக் களம் என்று வருணிக்கப்படும் காந்தி மண் காவிப் புழுதியால் மறைக்கப்பட்டு வருகிறது. குஜராத் முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழ்நிலையில், தங்கள் இசுலாமிய அடையாளங்களை மறைத்து இந்து பெயர்களுடன் ஜீவித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். மேலும் சங் பரிவார்கள் ஊடகங்களில், குஜராத் சிறந்த நிர்வாகியால் ஆளப்படுவதாக பீலா விடுகின்றனர். ஆனால் உண்மை நிலை அதுவல்ல.

நன்றி :தி சண்டே இண்டியன்

சனி, 6 மார்ச், 2010

கல்லூரி சான்றிதழ் தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

கல்லூரியில் படித்து முடித்தவர்கள் தங்களுடைய மாற்று சான்றிதழை (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்) தொலைத்துவிட்டாலோ, அல்லது இயற்கை சீற்றங்களின்போது அழிந்துவிட்டாலோ, மாற்று சான்றிதழ் பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.
மாற்று சான்றிதழ் வழங்கும் அதிகாரியாக கல்லூரி முதல்வரே செயல்படுகிறார்.
மாற்று சான்றிதழ் தொலைந்துவிட்டால் அது பற்றி அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். பின்னர் சான்றிதழ் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதற்கு காவல் அதிகாரி ஒரு சான்றிதழ் வழங்குவார். அந்த சான்றிதழை பெற்ற பின் மாற்று சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் (தாசில்தார்)மனு மூலம் தெரிவிக்க வேண்டும். தாசில்தார் அந்த பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்துவிட்டது உண்மை என சான்று அளிப்பார்.

பின்னர் காவல் நிலையம் கொடுத்த சான்றிதழ், தாசில்தார் வழங்கிய சான்றிதழ் ஆகியவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணம் ஆகியவற்றுடன் கல்லூரி முதல்வருக்கு மாற்று சான்றிதழ் நகல் கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மாற்று சான்றிதழ் வழங்குவார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழை தவறவிட்டால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்பெண் சான்றிதழை தொலைத்துவிட்டால் கடைசியாக படித்த கல்லூரி முதல்வருக்கு மதிப்பெண் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் அந்த மதிப்பெண் சான்றிதழ் நம்பர், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றை சரிபார்த்து அவர் வழியாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பரிந்துரை எழுதுவார். அத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம், வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்குவார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மதுக்கடை மறியல் போர்

மனிதநேய மக்கள் கட்சி மதுக்கூர் நகரம் சார்பாக மதுக்கடை மறியல் போர் இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு மதுக்கூர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குகிறது...



பொது மக்கள் அனைவரும் கலைந்து கொள்ளவும்....