வியாழன், 19 நவம்பர், 2009

குழந்தையின் அழுகை

கணேஷ் தனது அலுவலகத்தில் இருந்து புரப்பட்டதிலிருந்தே மிகவும் பதட்டமாக காணப்பட்டான் கணேசுக்கும் அபிராமிக்கும் திருமணம் ஆன போதே திருமணம் ஆன அபிராமியின் தங்கைக்கு அடுத்த வருடமே குழந்தை பிறந்துவிட தனக்கு குழந்தைபிறக்காத துக்கம் அவளை மிகவும் அவதிக்குள்ளாக்கியது.

3 ஆண்டுகள் வரை எதுவும் குறையாக தெரியமால் போய் கொண்டிருந்த வாழ்க்கை அவளது குறையை சமுதாயம் வெளிப்படையாக சொல்லி அவளை குத்திக்காட்ட மிகவும் உடைந்துபோனாள். கணேசும், அபிராமியும் நகரில் மிக சிறந்த மருத்துவர்கள் பலரிடமும் சென்று வந்தனர். இறுதியாக ஒரு மருத்துவர் அவளின் கர்ப்பபை மிகவும் பல்வீனமாக உள்ளதாகவும் தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டால் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூற இருவரும் சிகிச்சை எடுத்து கொண்டபின் அடுத்த ஆண்டே அபிராமி கருவுற்றாள்.

கருவுற்ற நாள் முதல் அவளை மிகவும் கவணமாக கவணித்து வந்தான் கணேஷ். வீட்டில் அவளை ஒரு வேலையையும் செய்ய விடாமல் தனியாக வீட்டு வேலைக்கு ஆள் வைத்தான் அலுவலகத்தில் இருந்து வந்த பின் அவளை வாக்கிங் அழைத்து செல்வது ஒவ்வொரு மாதமும் தவறாமல் செக்கப் என அனைத்திலும் கவணமாக இருந்தான். பிரசவ காலம் நெருங்க நெருங்க அபிராமி மிகவும் பலகீனமாக காணப்பட்டாள்.

இன்று அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்து விட்டு அவனுக்கு போன் செய்தர் அவனது மாமனார். டாக்டர் உங்களை உடனேயே வரும்படி கூறியதாக கூறி அழைக்க மிகவும் பதட்டமாகவே புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

ஒவ்வொருவரும் மிகவும் பதட்டமாக இருக்க ஆப்ரேசன் தியேட்டரில் இருந்து வீறிட்டு அழுதது குழந்தை சிறிது நேரத்திற்கு பின் டாக்டர் வந்து இருவரும் நலமாக உள்ளனர் என்றும் ஆனால் குழந்தை அழுவுவதை நிறுதவில்லை எனவும் கூற அனைவரும் என்ன செய்வது என அரியாமல் திகைத்துநின்றனர். தீடிரென்று எதிர் அறையின் கதவு திறந்தது. அனைவரும் திரும்ப.......


அங்கே நின்ற பாட்டி கூறியது "குட்வாட்ஸ்" கொடுங்க நீங்க கொழந்தயா இருக்கச்ச அதான் கொடுத்தேன்.......

புதன், 18 நவம்பர், 2009

போரடிப்பது பற்றி ஒரு கட்டுரை வரைக

போரடிப்பது பற்றி ஒரு கட்டுரை வரைக:
ஒரு மனிதனுக்கு எதனால் போரடிக்கிறது?
1. பார்த்த மனிதர்களையே திரும்பத்திரும்பப் பார்ப்பதால்
2. செய்யும் பணியிலே எந்தவிதமான மாறுதலும் இல்லாததால்
3. மிகுதியான ஓய்வுநேரம் - அந்த ஓய்வு நேரத்தை நல்ல பணியிலே செலவு செய்வதில்ஆர்வமின்மை.
4. சோம்பேறித்தனம் - இது இருப்பவர்கள் நிச்சயம் போரடிக்கப்படுபவர்களாகவேஇருப்பார்கள்
5. பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் - தனியே- இருப்பவர்களுக்கு மட்டும்தான்போரடிக்குமா? இல்லை. ஒரு குழுவாக - கூட்டமாக - இருப்பவர்களுக்கும்கூட பலநேரங்களில் போரடிக்கிறதே!
6. காதலுக்காக - காதலி(லன்) வருகைக்காக காத்திருப்பவர்களுக்கும் போரடிக்கிறது
7. போர்க்களத்தில் உயிரைப் பணயம் வைத்து சண்டை போடும் மாவீரனுக்கும்கூடபோர் முடிந்தபிறகு வரும் அமைதியைக்கண்டால் போர்தான்.
8. அமைதியை விரும்பி வனம் சென்று தவம் செய்யும் முனிவர்களுக்குப்போரடித்ததால்தானே குட்டிக்குட்டிக் கதைகளாக பஞ்சபாண்டவர்களுக்குச் சொன்னார்கள்.
9. செய்வதற்கு 1000 வேலைகள் இருந்தும், எந்த வேலையும் செய்யத்தோணாமல்மோட்டுவளையைப் பாதுகாப்பவருக்கு மட்டும்தான் போரடிப்பதன் அருமை புரியும்.
10. பரீட்சைத்தாள் விடை திருத்துபவனுக்குப் போரடித்தால் என்ன செய்வான்? "படித்துப் பாராமலேயே - குத்துமதிப்பாக மதிப்பெண் போடுவான்". நன்றாகப் படித்து அருமையாக எழுதிய அறிவழகனுக்கும் 65 சதவீதம்தான். ஒன்றுமே படிக்காமல், ஏனோதானோ என்றெழுதிய ஏகாம்பரத்துக்கும் 65சதவீதம்தான்.
11. போரடிப்பதிலிருந்து தப்பிப்பதற்காக சுற்றுலாப்பயணம் செய்கிறான் சுரேசு.ஆனால் அவனுக்குப் பேருந்துப்பயணம் போரடிக்கிறது. அவனால் அவனுடைய இருக்கையிலேசும்மா இருக்க முடியவில்லை. முன்பக்கத்திலே கண்டதையும் கிறுக்குகிறான்.
12. அழகான மனைவி - அருமையான வேலை - அறிவான குழந்தை(கள்) - கண்ணெதிரே கடற்கரை -காதை வருடும் மெல்லிசை - மேனியைத் தழுவிச்செல்லும் மெல்லிய தென்றல் -இவையெல்லாம் இருந்தும் அதை அனுபவிக்காதவனுக்கு அடிக்கிறது போர். இவனுமேகூட சிலநேரங்களில் 'என்ன வாழ்க்கை என்று' சலித்துக்க்கொள்கிறான்.
13. கோவிலுக்குச் சென்றால் மனநிம்மதி கிடைக்கும் என்று ஆலயதரிசனம்செய்யக்கிளம்புகிறாள் கோகிலா. அவளது நிம்மதி ஆலயத்தின் வாசலிலேயே தொலைகிறது.பிச்சைக்காரர்களின் தொந்தரவால். அவளும் இன்முகத்துடன் சில்லறைகளை அவர்களிடம்தருகிறாள்.திடீரென்று அவள் மனதில் மின்னல் வெட்டு - பிச்சையெடுப்போனின் கிழிந்தஉடைகளைக் காண்கிறாள். "தான் அடுத்த சென்மத்திலே இப்படி ஒருபிச்சைக்காரியாக(காரனாக) - பிறந்துவிடுவோமோ?" எனக் கவலை கொள்கிறாள். இன்றுஇருக்கும் இனிமையை அனுபவிப்பது மறந்து அடுத்த சென்மத்தைப் பற்றி யோசிக்கஆரம்பித்துக் கவலைப்படுகிறாள். இப்போது சாமிதரிசனமே கோகிலாவுக்கு பெரும்போரடிக்க ஆரம்பிக்கிறது.
14. கைதேர்ந்த மென்பொருளாளன் கணேஷ். அவன் வளைக்கிற வளைப்புக்கு 'கூகுளும்'வளைகிறது. புராஜக்டும் முடிகிறது. பெஞ்சில் இருக்கிறான். அப்போது அவனுக்கும்அடிக்கிறது மிஸ்டர். அன்ட் மிஸ்ஸஸ் போர்.
15. அரசியல்வாதிக்கோ லஞ்சம் வாங்கிவாங்கிப் போரடித்துப்போகி மக்களுக்கு ஏதாவதுநல்லது செய்யலாமே என்று யோசிக்கிறான். என்ன பலன் அதற்குள் அடுத்த தேர்தல்வந்துவிடுகிறது.
16. ஐந்தாம் வகுப்புக்கான அறிவியலை - 15 வருடமாகத் திரும்பத்திரும்பப்பாடமெடுக்கிறார் ஆசிரியர் 'ஆடியபாதம்'. அவருக்கு அறிவியல் போரடித்தால் என்னசெய்யமுடியும். விதியைத்தான் நொந்துகொள்ள முடியும். ஏன் என்றால் அறிவியல்பாடத்தில்தான் மிதப்பு விதி, நியூட்டன் விதி, பொருண்மை அழியா விதி - எனப்பலப்பல விதிகள் உள்ளன.
17. அது மெதுவாக ஓடிவரும் போட்டி. யார் கடைசியாக மெதுவாக ஓடி வருகிறாரோஅவர்களுக்கே பரிசு கொடுப்பார்கள். நம்ம 'தலை'க்கோ திடீரென்று போரடிக்கஆரம்பிக்கிறது. என்ன செய்தார்? மடமடவென்று வேகமாக ஓடி முதலில் வந்துவிட்டார்.
18. இராணுவத்தில் இருப்பவனுக்கு துப்பாக்கி சுடாமல் சும்மா இருப்பதென்றால்போர். அவன் என்ன செய்தான்? "தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டான்".
19. கண்டிப்பாக இதைப்படித்த உங்களுக்கும் போரடித்து இருக்கும் என்பது எனக்குத்தெரியும். எனது போரடித்தல் வியாதியை உங்களுக்குப் பரப்பிவிட்டுவிட்டேன்.
20. இதையும் மீறி உங்களுக்குப் போரடித்தால்....
பின்னுட்டத்தில் தெரிவியுங்கள்.....

வரவேற்பு.. தகவல்

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவ பிரார்த்திக்கின்றேன்...
என்னுடய வலை பதிவிற்கு வருகைதரும் அனைவரையும் வரவேற்க்கின்றேன்