ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

சென்னை - சிங்கம்ல.....

தோணி, ரெய்னா அதிரடி ரன் மழையில் மும்பையை துவம்சம் செய்து கோப்பையை கைபற்றியது சென்னை




சென்னை எல்லாம் சும்மா மொதல்ல செமிக்கு வர்றாங்களான்னு பார்க்கலாம் சொன்னாங்க

அப்புறம் செமிக்கு வந்தது உங்க லக் பைனலக்கு போக முடியாதுன்னு சொன்னாங்க

அப்புறம் மும்பை செம பார்ம்ல இருக்கு ஒங்கள ஓட ஓட விரட்டுவாங்க பாருங்க என்றல்லாம் சொன்னவங்க. இப்ப எங்க ஓடி ஒளிஞ்சிருக்குங்கன்னு தெரியல

நாங்கல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றஆளு

ஐ பி ல்-லில் யர் முன்னாடி பைனலுக்கு போறாங்க என்பது முக்கியம் இல்லை

யாரு ஐ பி ல் கப்பை எடுத்துட்டு போறாங்க என்பது தான் முக்கியம்...


என்னதான் சச்சின் மாஸ்டர் பேட்ஸ்மேனா இருந்தாலும் சிங்கத்தை சீண்டினால் அவ்வளவுதான்.

அசந்தா அடிக்கறது உங்க பாலிசி

அசராம அடிக்கிறது எங்க (சென்னையின்) பாலிசி...

நாங்கல்லாம் பொங்களுக்கே வெடி வெடி வெடிப்போம்
தீபாவளி அதுவும் சும்மா விடுவோமா எண்ண...

சிங்கம்ல..

புதன், 21 ஏப்ரல், 2010

நாம் நாமாக இருப்போம்..

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம். பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.

"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.

"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.

"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

நன்றி: ஹிதாயத்

புதன், 14 ஏப்ரல், 2010

ரிலாக்ஸ் ப்ளீஸ் -

இவை அனைத்தும் எனது மெயிலில் வந்தது. எனக்கு பிடித்தது


செய் அல்லது செத்து மடி – காந்தி சொன்னது.

படி அல்லது படுத்து தூங்கு -- யார் சொன்ன எண்ண. நல்ல இருக்குல பாலோ பண்ணு...

------------------------------

கொசுவை கொள்ள புது வழி.

கொசுவை கட்டி பிடிச்சு ஐ லவ் யூ சொல்லுங்க. அவமானம் தாங்காம அதுவே தற்கொலை பண்ணிக்கும்.

---------------------------

நைட்ல தூக்கம் வரலையா போய் கண்ணாடிய பாருங்க மயக்கமே வரும்.

தப்ப நினைக்காதிங்க இதுக்கப்பேர் தான் அழகுல மயங்குறது..

----------------------

எப்பலாம் உலகம், சூன்யமாவும், இருட்டாவும் தெரியுதோ, அப்பலாம் என் கைய பிடிச்சுக்கோ. உன்னை நான் பத்திரமா

வாசன் ஐ கேர் கூட்டிட்டு போறேன்

-------------------------------------

ஒரு விகடன் ஜோக்



அண்டை நாட்டு மன்னன் அனுப்பி வைத்துள்ள அழகு புறவே வா.. வா..
உன்னை வறுக்க வறுக்க என மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்...

சனி, 10 ஏப்ரல், 2010

தற்கொலை - சிறுகதை

வேலுவும் விஜியும் கனவண் மனைவிகள்அவர்களது மகன் சுந்தர்ராஜன் 6ஆம் வகுப்பு படிக்கின்றான்.அவனுக்கு சுந்தர் என்றால் மிகவும் பிடிக்கும் அவர்களுக்கும் திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை என்பதால் அவனிடம் இருவருமே மிகவும் அன்பாக இருந்தனர். வேலுவிற்கு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது, மராமத்து செய்வது போன்ற வேலை தினமும் அதி காலையில் எழுந்து வேலைக்கு சென்றால் மீண்டும் வீடு திரும்ப இரவு மணி ஆகிவிடும்.எவ்வளவு லேட்டா வந்தாலும் வந்து தன் மகனை பார்க்காமல் அவனை கொஞ்சமல் தூங்க மாட்டான்.

அவனுக்கு தன் மகனை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைத்து ஒரு நல்ல வேலையில் சேர்த்துவிட வேண்டும். தான் பார்க்கும் இந்த தொழிலில் அவனையும் ஈடுபடுத்த கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அவனை படிக்க வைத்தான். சுந்தரும் அப்பாவின் ஆசைகளையும் தனக்காக அவர் படும் சிரமங்களையும் உணர்ந்து நன்றாக படிதான்.

பள்ளிக்கூடம் சென்ற நேரம் போக விடுமுறை நாட்களில் அப்பாகூட வேலைக்கு செல்வது அவனது பொழுதுபோக்கு. அப்பாவிற்கும் மகன் தன் கண் எதிரிலேய இருப்பது மகிழ்ச்சியை கொடுக்க அவரும் அவனது லீவு நாட்களில் அவனை அழைத்து செல்வார். ஒரு நாள் அவர் மேலே ஏறி உத்திரத்தில் ஏறி அதில் உள்ள தேவையற்ற ஆணிகள், கொக்கிகள் ஆகியவற்றை அப்புரப்படுத்திக்கொண்டிருந்தார். தீடிரென்று கை வழுக்கிவிட கையில் உள்ள சுத்தியல் நழுவி கீழே விளையாடிக் கொண்டிருந்த அவனது மகனின் தலயில் விழுந்தது.

பதறியபடி அவனை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் பயப்படும் படி ஒன்றும் இல்லை எனவும் தலையில் அடிபட்டு இருப்பதால் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளவும் என கூறினார். இது நடந்த சில வருடங்களுக்கு பிறகு தீடிர் தீடிரென்று அவனது தலையில் கடுமையான வலி ஏற்படும் அப்போதெல்லாம் அவன் படும் கஷ்டங்களை பார்த்து வேலு மிகவும் துடி துடித்து போய்விடுவான். தன் பிள்ளை தன் கண் எதிரிலேய இப்படி கஷ்டப்படுவதை பார்த்த அவனது தாயும நாளாக நாளாக நோய்வாய்ப்பட்டு போனால்.

இதுபோல் வழியும் அதிகமாக ஆரம்பித்தால் அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னால் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தினாலும் தன்னால் தனது குடும்பம் முழுவதும் கஷ்டபடுவதை காண முடியாது யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில்

லெட்டர் எழுதிவைத்துவிட்டு வீட்டில் இருந்த பூசிமருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டான்.வீட்டிற்கு வந்த இருவரும் தன் மகன் இறந்து கிடந்ததை பார்த்த இருவரும் கதறி அழுதனர். பின் அவன் கையில் உள்ள கடிதத்தை வேலு பிரித்து பார்த்தன். அதில் இப்படி எழுதி இருந்தது
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
இதுக்கு தான் சொல்லுறது " ஆணியே புடுங்க வேண்டாம் "னு

ரொம்ப நாளா மொக்கை போடலாம்னு ஆசை அதான் இப்படி..
:) :) :)

திங்கள், 5 ஏப்ரல், 2010

வேண்டாம் இனி பூமி வெப்பமயமாதல் : விடை கொடுக்கும் இன்போசிஸ்

பூமி வெப்பமயமாதலை குறைக்கும் உலகளாவிய முயற்சியில் தன் பங்காக பெங்களூரு இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

'உலகில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனம், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனம்' என மற்ற நாடுகளால் மதிக்கப்படுவது, இன்போசிஸ் நிறுவனம். கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களை உருவாக்கி, உழைப்புக்கு உதாரணமாய் கூறப்படும் நிறுவனம், தற்போது நவீன தொழில்நுட்பங்களால் பூமி சூடாவதைக் கண்டு, அதைக் குறைக்க தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தது. அதில் உதயமானது தான், 'கிரீன் இனிஷியேட்டிவ்' என்ற 'பசுமை முனைப்பு' திட்டம்.


இத்திட்டத்தின் தலைவர் ரோஹன் பரேக், எக்ஸ்கியூட்டிவ் திகு ஆறுச்சாமி ஆகியோர் நமது நிருபரிடம் கூறியதாவது:வெப்பமயமாதலுக்கு எங்கள் அலுவலக கட்டடங்களில் உள்ள மின் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், மாசு போன்றவையும் ஒரு காரணம் என நினைக்கிறோம். எங்களது பெங்களூரு அலுவலக கட்டடங்களில் மட்டும் 22 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணம். எனவே, வெப்பமயமாதலை தடுக்க, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.எங்கள் நிறுவன தலைவராக நந்தன் நிகலேனி இருந்தபோது, 2008ல் இத்திட்டம் துவக்கப் பட் டது. மைசூருவில் உள்ள எங்கள் கட்டடங்கள் முற்றிலும் 'பசுமை கட்டடங்களாக' வடிவமைக்கப் பட்டது. இப்போது நாட்டின் எந்த பகுதியில் இன்போசிஸ் கட்டடம் உருவாக்கினாலும் அவை வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்படுகிறது.
மின் சேமிப்பு: மின்சாரத்தை சேமிக்க மின் விளக்குகளை 'எல்.இ.டி.,' விளக்குகளை மாற்றுகிறோம். இதனால், மின் சேமிப்பு அதிகரிக்கும். பகல் நேரங்களில் அதிக அளவு சூரிய வெளிச்சம் அறைகளுக்குள் நுழையும் விதமாக கட்டடம் கட்டப்படுகிறது. எனவே மின் விளக்கு தேவைப்படாது. போதிய வெளிச்சம் இருந்தால், இயல்பாகவே மின்விளக்கு எரியாத வகையில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதே போல, அறையில் ஆட்கள் இல்லாவிட்டால் தானாகவே அணையும் விளக்குகளை பொருத்துகிறோம்.


தண்ணீர்: வெப்பமயமாதலால் தண்ணீர் பற்றாகுறையும் ஏற்படுகிறது. இனிமேலும் தண்ணீரை வீணாக்க கூடாது. அனைத்து தண்ணீர் தேவையையும் மழை நீர் சேகரிப்பு மூலம் நிறைவேற்ற உள்ளோம். கழிவு நீரை சுத்திகரித்து, கழிப்பறை, தோட்டங்களுக்கு மீண்டும் பயன்படுத்துகிறோம். மைசூரு வளாகத்தில் மழை நீரை சேகரிக்க, மூன்று செயற்கை ஏரிகளை உருவாக்கி உள்ளோம். மொத்த தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை இந்த ஏரிகள் நிறைவேற்றும். ஐதராபாத் வளாகத்தில் மொத்தம் 19 குளங்களை வெட்ட உள்ளோம். இவற்றில் நான்கு முடிந்துள்ளன. அந்த வளாகத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் பணிபுரிவர். சென்ற ஆண்டு ஒரு நாள் பெய்த மழையிலேயே நான்கு குளங்களும் நிரம்பி விட்டன.


பசுமை மின்சாரம்: பசுமை மின்சாரம் என்பது, நிலக்கரி, அணுசக்தி போன்றவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படாமல், மாசு ஏற்படுத்தாத நீர் மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவது. இதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே சிறு காற்றாலைகளை வைத்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. சக்தியை வீணாக்கும் கலாசாரத்தை மாற்ற வேண்டும். ஒரு சதவீத மக்களின் மனம் மாறினால் கூட பெரிய சேமிப்பு கிடைக்கும். சக்தியை சேமிப்பதில் நாங்கள் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்கிறோம். இதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுடன் பேசுகிறோம்.
கட்டடங்களில் வெப்பத்தை குறைக்க பல தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம். குளிர்ச்சியை ஏற்படுத்துவது என்பதே, 'ஒரு பொருளில் உள்ள வெப்பத்தை வெளியே எடுப்பது தான்'. கட்டட சுவர்களுக்குள் ராக் உல், கிளாஸ் உல், ஸ்டைரோபோம் போன்ற பொருட்களை வைத்து கட்டினால், வெளி வெப்பம் உள்ளே வராது. அறையில் வெப்பம் குறைவாக இருந்தால், 'ஏசி' அதிகம் தேவைப்படாது.ரசாயன பூச்சு உள்ள கண்ணாடிகளை ஜன்னல்களில் பயன்படுத்தினால் சூடு உள்ளே வராது. புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்களை இவை தடுத்து விடும். இதனால் வெளிச்சம் மட்டுமே அறைக்குள் ஊடுருவும்.


கட்டட சுவர்களில் நேரடியாக சூரிய கதிர்கள் படுவது போல் கட்டக் கூடாது. கட்டடத்தின் மேலே, பளபளப்பான பூச்சு பூசப்பட்ட தடுப்பு வைக்கிறோம். இதில் பட்டு தெறிக்கும் ஒளி, மேலே சென்று இன்னொரு தடுப்பின் மீது பட்டு, திரும்பும். இப்படியே ஒளியை திருப்பி, அறைகளுக்குள் அனுப்பலாம். இந்த ஒளியில் வெப்பத்திற்குப் பதில் வெளிச்சம் மட்டுமே இருக்கும். இப்படி எல்லாம் கட்டடங்கள் கட்ட ஆரம்பத்தில் சற்று செலவு அதிகமானாலும், பின் சில ஆண்டுகளில் மின்சேமிப்பால் அதிக பலன் கிடைக்கும்.


கம்ப்யூட்டர்கள்: கம்ப் யூட் டர்கள் வெப்பத்தை உமிழுவதை தடுக்க, 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர்களின் மானிட்டர்கள் தானாகவே அணைந்து விடும் வகையில், அமைத்துள்ளோம். இதன் மூலமும் மின்சாரம் சேமிக்கப்படும். ஊழியர்களுக்குள் 'ஈகோ கிளப்' (சுற்றுச்சூழல் சங்கம்) ஏற்படுத்தி உள்ளோம். இவர்களின் துணையுடன் நாடு முழுவதும் சென்ற ஆண்டு மட்டும் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். பறவைகளை ஈர்ப்பதற்காக எங்கள் வளாகங்களில் இப்போது உள்ளூர் மரக்கன்றுகளைத் தான் நடுகிறோம். மங்களூரு வளாகத்தில், அழிந்து வரும் தாவர இனங்களை காப்பாற்றி வளர்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


பேட்டரி கார்: மாசுக் கட்டுப் பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களை இவர்கள், வளாகத்தின் உள்ளே அனுமதிப்பதில்லை. வளாகத்தின் உள்ளே, வாகனங்களை தொழிலாளர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஏராளமான சைக்கிள்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை எடுத்துக்கொண்டு வளாகத்திற்கு உள்ளேயே சுற்றிவிட்டு, எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம். புகை மாசை கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு. கட்டடம் கட்டும் போது, ஏதாவது மரத்தை அகற்ற வேண்டி வந்தால், அதை வெட்டாமல், வேரோடு அகற்றி, வேறு இடத்தில் மீண்டும் நட்டு, உயிர் கொடுக்கின்றனர். இதனால் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது.இப்படி சுற்றுச்சூழலை எந்த வழியில் எல்லாம் பாதுகாக்கலாமோ, அத்தனை வழிகளையும் உலகின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் செய்து வருகிறது.


புதிதாக கட்டடங்கள் கட்டும் தொழில் நிறுவனங்கள் இவர்களை பின்பற்றினால் சுற்றுச்சூழல் மாசுபடாது. குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிறுவனங்களுக்கும் லாபம்; நாட்டின் எதிர்காலத் திற்கும் நல்லது. வெப்பமயமாதலுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிக்கு இன்போசீஸ் வழிகாட்டுகிறது. எல்லா தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனி மனிதர்களும் விழிப்புணர்வு பெற்றால், 'பசுமை இந்தியா' என்ற நமது கனவு நிறைவேறும்.

வாழ்த்துக்கள் தொடரட்டும் இன்போசீஸ்-ன் சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்த சேவைகள் ...