ஞாயிறு, 30 மே, 2010

உலக புகையிலை எதிர்ப்பு நாள் - மே 31


உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது
புகையிலையினால் ஏற்படுகிற வாய்ப்புற்று நோய் கொண்ட நோயாளிகள், உலகிலேயே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.


இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே 56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.
90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.


இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.

இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்பு ஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.


புகையிலையை தவிர்ப்பதால் ஒரு விடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது.


புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில் பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால் கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர் நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும் கொல்லப்படுகின்றர்)
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


எல்லாவற்றிக்கும் மேலாக ஒவொரு உயிரையும் தனது ஆயுள் முடிவதற்குள் தாமாகவே முடித்துக்கொள்ள முயலுகிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் தற்கொலை செய்து கொள்கிறோம்.


இதில் தாம் மட்டும் இன்றி தம்மை சார்ந்து நிற்கும் மற்றவர்களையும் பதிப்புக்கு உள்ளாக்குகின்றோம். புகை பிடிப்பவரைவிட அதான் அருகில் நிற்பவர் அதிகம் பாதிக்கப்படுகிறார் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

மற்றவர்கள் புகைத்து வெளிவரும் புகையில் 4000 ற்கு அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 50 புற்றுநோயை ஏற்படுத்துவையாகும்.


தான் உயிரை தானே முடித்துக்கொள்ள அனுமதி இல்லாத பொது தன்னுடிய சுய நலதுக்காக் அடுத்தவர்களை பலிகொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.
வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் காற்றில் புகையின் செறிவு அதிகமாகும். இதனால் ஒருவரது மனைவி, குழந்தைகள், வீட்டில் உள்ள முதியவர்கள் என எல்லோரையும் பாதிக்கும்.

புகையை சுவாசிக்கும் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் ஆபத்துண்டு. அவர்கள் நிறை குறைந்த குழந்தைகளாகப் பிறப்பர்.

புகைத்தல் / புகையிலை பயன்பாட்டினை தவிர்க்க சில ஆலோசனைகள்

1 . சிகரெட் சாம்பல் போடும் தட்டுகள், பான், ஜர்தா போன்றவற்றை கண்ணிற்கும், மனதிற்கும் மறைவாக வைக்க வேண்டும்

2. சுவிங்கம், இனிப்புகள், பெப்பர்மென்ட் மிட்டாய்கள், சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்ளுதல்

3. எப்பொழுதெல்லாம் புகையிலை, பான் போன்றவை நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில், மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது புகைப்பழக்க எண்ணத்தை குறைக்க உதவுகிறது

4. புகையிலை எடுக்க நீங்கள் நினைக்கும்போது, உங்கள் குழந்தைகள் பற்றி சிந்தியுங்கள். மேலும், புகையிலையினால் நோய் ஏற்படின், அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதனை சிந்தனை செய்து பாருங்கள்

5. புகையிலை பழக்கததினை விடுவதற்கு உங்களால் முடியும் என உறுதியாக நம்புங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக