திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.
1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப் பட்டார்கள்.
4.பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக் கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழ வேண்டுமா?
2.நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க!
நூஹு(அலை), லூத்(அலை) ஆகிய இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்ககளின் மனைவிகளாக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைத் தூதர்களால்) அவ்விருவரையும் இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இருவரும் நரகிற்குச் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (66:10)
இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது. இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரக வாசியாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிரகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரகவாசியான மனைவியோடு வாழ்வது போல் வாழ்க என வாழ்த்தலாமா?
3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க!
இப்றாஹீம் நபி-ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை) குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா?
நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார் என அல்குர்ஆன் 11:71,72 கூறுகிறது.
வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத்தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்தத் தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தைப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பார்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா?
தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக