சனி, 27 மார்ச், 2010

.:: பூமி தினம் ::.

உலகை அச்சுறுத்தி வரும் பருவநிலை சீர்கேட்டை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கையாக உலகம் முழுவதும் நேற்று பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.

பூமி நேரத்தையொட்டி இந்தியா முழுவதும் நேற்று பல இடங்களில் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து மக்கள் அதை அனுசரித்தனர்.

நாடு முழுவதும் பூமி நேரம் பரவலாக அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பெரும்பாலானோர் வீடுகளில் விளக்குகளை அணைத்து அனுசரித்தனர்.

மொத்தம் 100 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5 கோடி பேர் இதில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்த பூமி நேரம் அனுசரிப்பது தொடங்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. ஆண்டுதோறும் இது அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பூமி நேரத்தை புறக்கணித்த கிரிக்கெட் உலகினர்...

இந்தியாவின் 80 சதவீத அளவிலான மின்சாரம் நிலக்கரியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ள ஒன்று இந்தியா. பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் நாமும் வெளியேற்றி வருகிறோம். இந்தியாவில் மின்சாரத்தின் மூலமான கார்பன் மாசுக்கள்தான் அதிக அளவில் வெளியேறுகின்றன. அதாவது பாதி புகை மாசு மின்சாரத்தால்தான் ஏற்படுகிறது.

பூமி நேரம் அனுசரித்துக் கொண்டிருந்தபோது பிரகாசமான விளக்கொளிக்கு மத்தியில் கிரிகெட் போட்டி சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.பூமி நேரத்தை விட போட்டி முக்கியம் என்று கருதிய ரசிகர்களும் அவர்கள் பூமி நேரத்தின்போது டிவிகளை அணைக்காமல் தொடர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

உலக அளவில் புகை மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகளில் முன்னணியில் நாம் அதை தடுப்பதற்கான முயற்சியிலும் முன்னணியில் இருந்திருக்க வேண்டும்...

பூமி நேரத்திற்காக ஒரு நாள் கிரிக்கட் விளையாட்டை தள்ளிவைத்தால் அதில் ஈடுபட்ட யாருக்கும் நஷ்டம் ஏற்படபோவதில்லை அப்படி இருக்க இந்த பூமி தினத்தை முன்னிட்டு கிரிக்கட் போட்டிகள் ஒருநாள் ரத்து என்ற அறிவிப்பை IPL கிரிகெட் வாரியம் அறிவிதிருந்தால் இதன் மூலம் இந்த நாள் பற்றிய விழிப்புணர்வு பரவலாக எல்லா மக்களிடமும் ஏற்பட்டு எல்லரோயும் இந்த பூமி தினத்தில் பங்கேற்க செய்திருக்கமுடியும்.

ஆனால் பணம் பண்ணுவது மட்டுமே எங்களது தலையாய கடமை என்பதாக உள்ள மோடிக்கள். உலகம் எப்படி போனால் எங்களுக்கு எண்ண என்ற எண்ணத்தில் நேற்று கிரிகெட் விளையாட்டை நடத்தியுள்ளது மிகவும் கவலைக்குரியது.

நேற்று பூமிதினம் பற்றிய செய்தியை எங்களது அறையில் உள்ள நண்பர்களிடம் கூற முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து ஒத்துழைத்த அணைத்து நண்பர்களுக்கும் மேலும் இந்த நல்ல நிகழ்ச்சியில் பங்கேற்று நேற்று விளக்கை அணைத்து பூமி தினம் அனுசரித்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக