புதன், 10 மார்ச், 2010

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் பகுதி -2

4. நபி யூஸுஃப்-ஸுலைஹா போல் வாழ்க!
1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. இந்த ஸுலைஹா யார்?
2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன் வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
அல்குர்ஆனே இவள் தவறு செய்து விட்டாள் என வர்ணிக்கிறது. தவறு செய்தவள், முன்னைய கணவனுக்குத் துரோகம் செய்தவள் நபியின் மனைவியாக முடியுமா?
4. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா?
5. திருமணம் நடந்ததாக ஆதாரமே இல்லாத ஒருவளை- ஒரு தம்பதியை குறிப்பிட்டு வாழ்த்தலாமா? இது முறையா?
பல தீமைகளைத் தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவியாக்க வேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
6. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப் பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற அவசியம் என்ன?
7. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
8. அஹ்ஸனுல் கஸஸ்-அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுஃப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?
இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்ச்சிகரமான மண விழாவில் புதுத் தம்பதியை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்எவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இந்த துஆவை ஓதாமல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த “பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீகைர்’-அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக… (நபிவழி துஆ அபூஹு ரைரா(ரழி) அறிவிக்கும், இந்த ஹதீஸ் அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
இந்த துஆவை மட்டும் ஓதினால் திருமணம் தடுக்கப்பட்டதாகி விடுமா? இல்லை பாவமான காரியமாகி விடுமா? இல்லை அல்லாஹ்வால் இந்த நிக்காஹ் புறக்கணிக்கப்பட்டு விடுமா?
(மவ்லவிகளை பதில் சொல்லுங்கள். இப்போதாவது உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறதா?)
ஒருபோதும் இல்லை என்பது அறிவு ஜீவிகளுக்கு நன்றாகவே புரியும். அப்படி இருந்தும் பல விதமான குழப்பங்கள் அடங்கிய-ஏன் குழப்பங்களே இல்லாமல் மிகவும் தெளிவாக (அல்லாஹ்வால் குர்ஆனிலே அவர்களைப் பற்றி சொல்லப்பட்டு) தவறு என்று விளங்கக் கூடிய இந்த பாவமான சாபக்கேட்டை நாமாகவே கேட்டுப் பெற்றுக் கொள்வதா?
அறிவு ஜீவிகள் புகுந்து பிரித்து அறியக்கூடிய ஜீவிகள் கேட்கிறார்கள். பல ஆண்டு காலமாக யாரும் இந்த துஆக்களை கேட்கவில்லையா? அவர்கள் எல்லோரும் நாசமாகி வாழ்க்கையில் சந்தோசமே இல்லாமல் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கி றார்களா? அவர்கள் ஒன்று சேர்ந்து வாழாமல் தான் போய்விட்டார்களா? அல்லது குழந்தை பாக்கியம் தான் இல்லாமல் போய்விட்டதா என்று? இது ஷைத்தான் அழகாகக் காட்டும் கேள்வியாகும். உங்களுக்கு நன்றாகவே தெரியும் கேட்கின்ற துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று; அதே வேளை சிலபேரின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவும் செய்கிறது என்று. இங்குதான் நீங்கள் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் கேட்கக் கூடிய அந்த (சாபக் கேடான) பத்துஆவை சில நேரம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும், மறுக்கவும் செய்கிறான்.
அப்படி இருக்க சாபக்கேடான இந்த துஆவால் நாசமானவர்களும் இருக்கலாம், மேலும் அல்லாஹ்வால் இந்த (சாபக்கேடு) பத்துஆ புறக்கணிக்கப்பட்டு நன்றாக இருப்பவர்களும் இருக்கலாம். இந்த சாபக்கேட்டை நாமாகவே கேட்டு பெற்றுக் கொள்வதை விட்டுவிட்டு இனிமேலாவது அல்லாஹ்வும் ரசூலும் கற்றுத்தந்த வழியில் துஆக்களை கேட்டு நன்மையைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்களேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக