ஞாயிறு, 21 மார்ச், 2010

உலக தண்ணீர் தினம் 22-03-2010

அன்பானவர்களே நாளை (22-03-2010) உலக தண்ணீர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந் நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் சுத்தமான நீருக்காக மக்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டிருப்பதாகவும், நாடு முழுவதும் சுத்தமானநீர் கிடைக்காத காரணத்தால் சுமார் நாலரை கோடி மக்கள் பல வியாதிகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், இந்த சுகாதார கேடுகள் வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

> ஏற்பட்டிருக்கும் இந்த பஞ்சம் சுத்தமான நீர் கிடைக்காத பஞ்சத்தால் ஏற்படவில்லை. ஆனால் சரியான இடத்தில், சரியான நேரத்தில் போதிய தரமான நீர் கிடைக்காததாலும், நீர் ஆதாரங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள தவறியாதாலுமே ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை விவரிக்கின்றது. இது தவிர பெருகி வரும் தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ளதும், நீர் ஆதாரங்களை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்களை சரிவர நிறைவேற்றாததும் இந்த நிலைமைக்கு காரணமாகின்றது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது நீர் ஆதாரங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஒரு குடம் தண்ணீருக்காக நாள்தோறும் பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும் பல லட்சக்கணக்கான பெண்கள் இந்திய கிராமங்களில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

நம் ஆட்சியாளைர்களிடம் (அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்) தண்ணீர் பிரச்சினையை தீர்க்க ஒரு நல்ல நீண்ட கால திட்டம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேலும் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கும் பொழுதெல்லாம், அதை நிரந்தரமாக யாரும் தீர்ப்பதில்லை. உதாரணமாக, ஆற்று நீர் கிடைக்காத போது நாம் கிணறு தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. கிணறுகள் வற்றியதும் ஆழ்துளை கிணறுகள் தோண்டினோமே தவிர வேறு நிரந்திர வழி தேடவில்லை. இன்று ஆழ்துளை கிணறுகளும் வற்றியதும் கடல் நீரை குடி நீராக மாற்றவும், நதிகளை இணைக்கவும் மட்டுமே சிந்திக்கிறோம். மரம் நட்டால் தான் மழை பொழியும் என்று நம் அரசு என்ன தான் கரடியாக கத்தினாலும் நாம் அதை கவனிக்காமல் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்து வாணத்தையே அன்னாந்து அல்லவா பார்க்கிறோம்.

ஒரு சமயம் தென் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வந்த பொழுது, நீர் நிலைகளை ஆராய்ச்சி செய்ய வெள்ளையர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தனர். அப்பொழுது இருந்த அந்த நீர் நிலைகளின் பின்னலை (Network) பார்த்து அதிசயித்தனர். அதாவது, ராமநாதபுரத்தில் ஒரு குளம் இருக்கும். மழைக் காலத்தில் அந்த குளம் நிரம்பியதும், அந்த குளத்தில் இருந்து வடியும் உபரி நீர், வழிந்து சென்று அடுத்த ஊரில் இருக்கும் குளத்தை நிறப்பும். இது அப்படியே அடுத்த ஊருக்கும் தொடரும். இந்த முறையால், தண்ணீர் பிரச்சினை தீர்வதுடன் அதிக மழை பொழியும் பொழுது வெள்ளத்தையும் தவிர்க்கும். ராமநாதபுர மாவட்டம், முன்பு செழிப்போடு தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது? நாம் நம்முடைய குளாங்களை வனிக வளாகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆற்றையும், குளத்தையும் தூர் வாரும் ஒப்பந்த்தில் ஊழல் புரிந்திருக்கிறோம்

இயற்கை ஒரு புதையல் தான். ஆனால், எடுக்க எடுக்க குறையும் அமுத சுரபி அல்ல. இயற்கைகும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை நம்மால் தொட முடியாது. தொட முயன்றால் தோல்வி தான் கிடைக்கும். இயற்கை நமக்குக் கொடுக்கும் வளங்களை முடிந்த வரை சிக்கனமாக உபயோகிக்க பழக வேண்டும். இருப்பதை வைத்து மேலும் நம் வளங்களை பெருக்க வேண்டுமே தவிற, இருப்பதை உபயோகிக்க மட்டும் (அழிக்க) முயலக்கூடாது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை சார்ந்து தான் வாழ முடியும், வாழ வேண்டும். ஒரு இனம் இன்னொரு இனத்தை அழித்தால் மற்றொரு இனமும் தானாக அழியும்.

இந்த பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு? இயற்கையிடம் இருந்து திருடுவதை விட்டு, நீர் நிலைகளைப் பெருக்கலாம். நீர் நிலைகளைப் பெருக்க நீரை சேமிப்பது மிக மிக அவசியம்.
இது மக்களுக்கான திட்டம். மக்களும் இந்த கொடுமையை நன்றாக உணர்ந்துள்ளனர். அதனால் அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நிச்சயமாக மக்கள் உதவுவார்கள். குளங்களை வனிக வளாகங்களாக மாற்றுவதை விட்டு, அவற்றை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் (ஊழல் இன்றி). இந்த திட்டம் நிறைவேற, சத்தியமாக அரசியலை கலக்க கூடாது. அதனால், மக்களும் தன் பங்கிற்கு, வீடுகள் தோறும் மழை நீரை சேமித்து வைக்கலாம். மேலும் நீரை சேமிக்க பல வழிகள் உள்ளது.
காலையில் பல் துலக்கும் பொது பைப்ஐ அப்படியே திறந்து வைப்பதற்கு பதிலாக ஒரு மக் அல்லது வாளியில் பிடித்து வைத்துக்கொல்ளலாம், தண்ணீர் குடிக்கும்போது தேவையான அளவு மட்டும் பிடித்து குடிக்கலாம், குளித்த , பாத்திரம் கழுவிய தண்ணிரை செடிகளுக்கு பயன்படுத்தலாம் இப்படி சின்ன சின்ன முறைகளினால் கூட நிறைய தண்ணீர் மிச்சமாகும்.

ஒரு நல்ல நீண்ட கால திட்டத்தை உருவாக்கி அதை கண்டிப்புடன் செயல் படுத்த வேண்டும். இப்படி ஒரு திட்டம் வந்தால், அதற்கு மிகப் பெறிய எதிரியாக ஊழல் மட்டுமே இருக்க முடியும். இதை முறியடிக்க, இந்த திட்டத்தை சமூக அக்கறையுள்ள சில அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம். வரயிருக்கும் தலைமுறைகள் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க இருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கிறது. எனவே தண்ணிரை சேமிப்போம் எதிர் கால தலைமுறையை பாதுகாப்போம்.



நன்றி:இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக